தனுஷ் தம்பி சூப்பரா இருக்காரு... அருமை... வாழ்த்து தெரிவித்த நடிகை ரேவதி
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா லஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெகமே தந்திரம்.
Recommended Video
வரும் 18ம் தேதி நெட்ப்ளிக்சில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.
இதையடுத்து பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை ரேவதியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தள்ளிப்போன ரிலீஸ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஜெகமே தந்திரம். கடந்த ஆண்டே இதன் ரிலீஸ் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.
ட்ரெயிலர் ரிலீஸ்
படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு காத்திருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பால் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது தெரியாததால் தற்போது நெட்ப்ளிக்சில் படம் வரும் 18ம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 சிங்கிள்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

நடிகை ரேவதி வாழ்த்து
சிறப்பான வகையில் வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரெயிலருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ரேவதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் தம்பி சூப்பரா இருக்காரு. அருமை என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பழைய படத்தை வெளியிட்ட ரேவதி
முன்னதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தேவர் மகனின் பழைய புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் அவர் கிராமத்து கதாபாத்திரத்ல் நடித்திருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு புகைப்படத்திற்காக வெட்கத்துடன் போஸ் கொடுக்கும்வகையில் அந்த புகைப்படம் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











