Don't Miss!
- News
வட இந்தியர்கள் பாஜக வாக்காளர்கள்.. அவர்களை ஆதரிக்க ஒரு கூட்டம் இங்கே இருக்கு..அட்டாக் மோடில் சீமான்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அந்தப் படத்தில் தனுஷ் என்னை காதலித்தார்... நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
சென்னை: ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
க/பெ ரணசிங்கம் வெற்றியைத் தொடர்ந்து பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் நடிக்கும்போது தனுஷ் தன்னை காதலித்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிக் பாஸ் லாஸ்லியா பட பாடலை ரிலீஸ் செய்த இயக்குநர் ராஜமெளலி.. அவர் தான் காரணமா?

காக்கா முட்டை
நடிப்புக்கு முக்கியத்துவம் தரும்போது கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோல்களில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகைகள் பலரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர். குறிப்பாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தது மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது.

விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து
காக்கா முட்டை கொடுத்த மிகப்பெரிய திருப்புமுனையை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ரம்மி, தர்மதுரை, க/பெ ரணசிங்கம் என விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றது.

ராஜனாக அமீர்
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தனது ஒவ்வொரு படைப்புகளிலும் முத்திரையைப் பதித்து வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னையை மையமாக வைத்து வெளியான வடசென்னை. கேங்ஸ்டார் குறித்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ராஜனாக அமீர் மிரட்டியிருப்பார். ஹீரோவாக தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தனுஷ் என்னை காதலித்தார்
வடசென்னையில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு, காதல் காட்சிகளில்,வசனங்கள் என மிக வித்தியாசமாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தில் தனது நடிப்பைப் பார்த்து தனுஷே தன்னை காதலித்து விட்டதாகவும் அந்த அளவிற்கு காதல் காட்சிகளில் மிக தத்ரூபமாக வெற்றிமாறன் தன்னை நடிக்க வைத்து விட்டதாகவும் வடசென்னையில் தனக்கு கிடைத்த பெயர் நினைத்துக் கூட பார்க்க முடியாத வாய்ப்பு எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.