சிறப்பான சம்பவங்களை செய்த மாரி படம்... 6வது ஆண்டு கொண்டாட்டத்தில் குழுவினர்
சென்னை : நடிகர் தனுஷ், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2015 ஜூலை 17ல் வெளியான படம்.
தனுஷின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இந்த படம் அவருடைய சினிமா கேரியரில் சிறப்பான படமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த படம் வெளியாகி 6 ஆண்டுகளை தற்போது கடந்துள்ளது.

மாரி படம்
நடிகர் தனுஷ், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2015 ஜூலை 17ம் தேதி வெளியான படம் மாரி. பாலாஜி மோகன் இந்த படத்தை இயக்கியிருந்தார். புறா பந்தயத்தையும் செம்மரக் கடத்தலையும் மையமாக கொண்டு கமர்ஷியல் படமாக இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

சிறப்பாக அமைந்தது
படத்தில் மாரியாக நடித்திருந்தார் தனுஷ். இவரது சேட்டைகள் மற்றும் ரோபோ ஷங்கர் உள்ளிட்டவர்களின் காமெடி கலாட்டாக்களும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தன. இந்த படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகி அந்த படமும் சிறப்பாக அமைந்தது.

6 ஆண்டு கொண்டாட்டம்
படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சிறப்பான இசையமைப்பில் பாடல்களையும் சிறப்பாக அமைத்திருந்தார். படத்தின் டானு டானு பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி தற்போது 6 ஆண்டுகளை கடந்துள்ளது. இதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

வொன்டர்பார் பிலிம்ஸ் ட்வீட்
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குறும்புத்தனமான டானை ரசிகர்கள் மாரி படம் மூலம் சந்தித்தனர் என்று தனுஷின் வொன்டர்பார் பிலிம்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளது. மேலும் தனுஷ், காஜல் அகர்வால், பாலாஜி மோகன், அனிருத் உள்ளிட்டவர்களையும் டேக் செய்து மாரியின் போஸ்டரையும் பதிவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











