Dhanush: தனுஷுக்கு தங்கையாகும் பிரபல நடிகை... D 50 கேங்ஸ்டர் படமா இல்ல வானத்தை போல செகண்ட் பார்ட்டா
சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படம் பீரியட் ஜானரில் உருவாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து தனுஷ் தனது 50வது படத்தில் அவரே இயக்கி நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியும் இணைந்துள்ளாராம்.
தனுஷின் D 50-ல் இணைந்த அபர்ணா பாலமுரளி: தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D 50 படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். தனுஷின் 50வது படமான இதனை அவரே இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படமாக D 50 உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. D 50 படம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தனுஷுடன் விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஸ்டார் காஸ்டிங்கே மிரட்டலாக இருப்பதால் D 50 படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியும் இப்படத்தில் இணைந்துள்ளதாராம். மேலும், இவர் சந்தீப் கிஷன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. அதேநேரம் எஸ்ஜே சூர்யாவும் சந்தீப் கிஷனும் தனுஷுக்கு அண்ணனாக நடிக்கவுள்ளனர்.
இதில் இன்னொரு முக்கியமான அப்டேட்டாக, தனுஷின் தங்கையாக துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்தான் தனுஷின் ஜோடியாக நடிப்பார் என பார்த்தால், இப்போது தங்கையாக நடிக்கவிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனுஷுக்கு யார் ஜோடி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த ரேஸில் த்ரிஷா, கங்கனா ரனாவத் இருவரும் போட்டியிட்டு வருகிறார்களாம்.
அண்ணன் - தங்கை, அண்ணன் - தம்பி செண்டிமென்ட்டில் எப்படி கேங்ஸ்டர் படம் உருவாகும் எனவும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் தனுஷின் D 50 வானத்தைப் போல செகண்ட் பார்ட் மாதிரி ஃபேமிலி சென்டிமெண்ட் படமாக இருக்குமோ என விவாதம் செய்து வருகின்றனர். முன்னதாக D 50 படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலகிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











