Dhanush: “எதிரில் வந்த சூப்பர் ஸ்டார்... யோசிக்காமல் கை கொடுத்த தனுஷ்..” ட்ரெண்டாகும் மாஸ் போட்டோ!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது.

இன்னொரு பக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனது 50வது படத்தில் பிஸியாக காணப்படுகிறது.

இந்நிலையில், தனுஷும் சூப்பர் ஸ்டாரும் திடீரென சந்தித்துக் கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

 Dhanush: Malayalam Superstar Mohanlal and Dhanush met photo trending

சூப்பர் ஸ்டாரை சந்தித்த தனுஷ்
கோலிவுட்டின் டாப் மோஸ்ட் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த தனுஷ், பின்னர் அவரை பிரிந்துவிட்டார். அதேநேரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் வெளியாகும் போது வாழ்த்துத் தெரிவிப்பதும், FDFS பார்ப்பதும் தனுஷின் வழக்கமாகவே உள்ளது.

சமீபத்தில் கூட ரஜினியின் ஜெயிலர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு ட்வீட் போட்டிருந்தார் தனுஷ். இந்நிலையில் தற்போது கேப்டன் மில்லரில் நடித்து முடித்துவிட்ட தனுஷ், அடுத்து தனது 50வது படத்தில் பிஸியாக காணப்படுகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் D 50 படத்தின் ஷூட்டிங்கும் இந்த மாதம் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தனுஷின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் தனுஷ் எடுத்துக்கொண்ட இந்த போட்டோ, தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. விமான நிலையம் அல்லது பொது நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டதாகத் தெரிகிறது. கூலர்ஸுடன் செம்ம ஸ்டைலாக இருக்கும் மோகன்லால், தனுஷுக்கு கை கொடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்.

தனுஷும் ரொம்பவே பவ்யமாக மோகன்லாலுடன் பேசிக் கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் மோகன்லால். மேத்யூ என்ற கேங்ஸ்டராக மாஸ் காட்டிய மோகன்லாலை சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் கொண்டாடினர். மல்லுவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், ரஜினிக்காக ஜெயிலர் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனுஷை மோகன்லால் சந்தித்துக்கொண்டது ரசிகர்களிடம் இன்னொரு எதிர்பார்ப்பையும் கொடுத்துள்ளது. தனுஷ், மோகன்லால் கூட்டணியில் ஒரு படம் உருவாகுமா என எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்த மோகன்லால், விரைவில் தனுஷுடனும் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X