Kara Movie Stills: கர படத்தில் தனுஷ் - மமிதா எப்படி இருக்காங்கனு பாருங்க.. தரமான சம்பவம் லோடிங்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ், மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சரமூடு, ஜெய் ராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர. இந்த படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளதால், தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிந்த அடுத்த வாரத்தில் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் கதை தேர்வில் கை தேர்ந்த நடிகர்களில் ஒருவர் என்று கூறலாம். பக்காவான கமர்ஷியல் படமும் கொடுக்க முடியும், மிகவும் இண்டென்ஷன் படமும் கொடுக்க முடியும், தரமான அரசியல் படமும் கொடுக்க முடியும், மக்களின் வாழ்வியலோடு கலக்கும் படமும் கொடுக்க முடியும் என்று பல ஆண்டுகளாகவே நிரூபித்து வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் என்றால் அது இட்லி கடை. இந்த படத்தின் கதையை அவரே எழுதி, திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் இருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இப்படி இருக்கையில் அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. காரணம் விக்னேஷ் ராஜாவின் முதல் படமான போர் தொழில் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது.
எதிர்பார்ப்பு: இப்படியான இயக்குநர் நடிகர் தனுஷ் போன்ற ஒரு தேசிய விருது நடிகருடன் இணைந்து பணியாற்றுகிறார் என்றால் படத்தின் மீது இயல்பாகவே நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் நடிப்பது புதிதல்ல, ஆனால் மலையாள நடிகர்கள் தொடர்ந்து தமிழில் நடிப்பது என்பது கடந்த காலங்களில் தொடர்ந்து நடைபெற்றது கிடையாது.

சுராஜ் வெஞ்சரமூடு: அப்படிப் பார்க்கையில் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு தமிழில் தொடர்ந்து பல்வேறு நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவர் விக்ரம் உடன் இணைந்து, வீர தீர சூரன் பாகம் 2 படத்திலும், இந்த ஆண்டில் கடந்த வாரத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் யூத் படத்திலும் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் இவர் தற்போது கர படத்தில் நடித்துள்ளார்.
புது போட்டோஸ்: படத்தின் போஸ்டர், ஒரு பாடல் என படக்குழு தரப்பில் வெளியிடப்பட்ட எல்லா அப்டேட்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து,வெளியிடப் பட்டுள்ள தனுஷ் மற்றும் மமிதா பைஜுவின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல் இருவரும் ஒரு புகைப்படத்தில் கண்ணீருடனும், மற்றொரு புகைப்படத்தில் ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்ட தம்பதியர்கள் போல அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் பலரும் படம் தனுஷின் கெரியரில் மற்றொரு முக்கியமான படமாக இருக்கும் போலயே என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











