D55 பூஜை நேற்று.. இன்று தனுஷின் புதிய படம் பற்றி பேச்சு.. மனுஷன் ஃபுல் ஃபார்மில் இருக்காரு.. இயக்குநர் அவரா?
சென்னை: தனுஷ் இப்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்து முடித்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் பூஜை நேற்றுதான் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தனுஷின் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்ளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக ஜொலிக்கும் தனுஷுக்கு கடந்த சில வருடங்களாக பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. கடந்த வருடத்தில் மட்டும் தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை, குபேரா ஆகிய மூன்று படங்களில் நடித்தார். மூன்று படங்களின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. எப்படியும் இந்தப் படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிடும் என்றுதான் அவரும், ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள்.
படங்கள் தோல்வி: ஆனால் இட்லி கடையை தவிர்த்து மற்ற படங்கள் பெரிதாக செல்ஃப் எடுக்கவில்லை. தேரே இஷ்க் மெய்ன் படம் பழைய காலத்து கதையோடு வந்தது என்றும்; குபேரா சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை என்பது ரசிகர்களின் கருத்து. எனவே வணிக ரீதியாக எப்படியாவது ஒரு வெற்றியை பெற்று மீண்டும் ஃபார்முக்கு திரும்பிவிட வேண்டும் என தனுஷ் மும்முரமாக உழைத்துவருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் சொல்கிறார்கள்.

அடுத்த படங்கள்: இந்த வருடத்தில் அவரது நடிப்பில் கர படம் வரவிருக்கிறது. இதனை போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார். சமீபத்தில்தான் க்ளிம்ப்ஸ் வெளியாகி ஏகோபித்த ரெஸ்பான்ஸை பெற்றது. இப்படத்துக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55ஆவது படத்தில் நடிக்கிறார். இதில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த பூஜை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படம் மெகா வெற்றியை பெற்றது. எனவே தனுஷை வைத்து அவர் இயக்கவிருக்கும் D55 திரைப்படமும் அதே ரிசல்ட்டைத்தான் பெறும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் இருக்கிறது. நேற்றுதான் சென்னையில் வைத்து படத்தின் பூஜை பிரமாண்டமாக நடந்தது. இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அநேகமாக இப்படமும் இந்த வருடத்திலேயே ரிலீஸாக வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது.
தனுஷின் அடுத்த படம்: இப்படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்நிலையில் அவர் புதிய படம் பற்றி தகவல் ஒன்று வந்திருக்கிறது. அதாவது D55, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும்; சமீபத்தில்தான் மணி சொன்ன கதையை தனுஷ் டிக் அடித்தார் என்றும்; அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிகிறது. முதன்முறையாக தனுஷ் - மணிரத்னம் கூட்டணி அமையும்பட்சத்தில் அதுவாவது ஹிட்டாகுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











