‘கர்ணன்’ ஆகும் தனுஷ்.. யார் முதுகுல குத்தப் போறாங்கனு தெரியலை.. மாரிசெல்வராஜ்தான் பதில் சொல்லணும்!
தனுஷின் புதிய படத்திற்கு கர்ணன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு "கர்ணன்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அனைவரையும் தன்பக்கம் திருப்பியவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்த அவருடைய இந்த படைப்பு தமிழகத்தை தாண்டி உலகின் பல பகுதிகளில் பாராட்டை பெற்றது.

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். பரியேறும் பெருமாள் வெற்றிப் பெற்ற போதே இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
ஆனால் தனுஷ் வெற்றிமாறன் இயக்கும் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கும் 'பட்டாஸ்' ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இதனால் மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் தாமதமாக தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
தற்போது அசுரன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், பட்டாஸ் பட ஷூட்டிங்கும் முடியும் நிலையில் இருக்கிறது. எனவே தாணு தயாரிக்கும் மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு "கர்ணன்" என தலைப்பு வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே சிவாஜி நடிப்பில் வெளியாகி இன்றளவும் புகழ் பெற்று விளங்கும் படம் 'கர்ணன்'. எனவே அந்த படத்தின் டைட்டில் தனுஷ் படத்திற்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாணு, பிரபு குடும்பத்தாருக்கும் மிகவும் நெருக்கமானவர். விக்ரம் பிரபு நடிக்கும் படங்களை அவர் தான் தயாரித்து வருகிறார். எனவே டைட்டிலுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்கின்றனர்.
இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கிறார். லண்டனில் நடக்கும் கேங்ஸ்டர் ஸ்டோரியான இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐரோப்பாவில் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











