கிரிக்கெட் மைதானத்தில் தனுஷ்.. சினிமா பிரபலங்கள் வந்தும் லக் இல்ல.. சிஎஸ்கே தோல்வி!

சென்னை: Chennai Super Kings (CSK) மற்றும் Punjab Kings (PBKS) அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டி, சென்னை M. A. Chidambaram Stadium மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இந்தப் போட்டியை நடிகர் தனுஷ், நடிகை மீனா, ஷாலினி உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் ரசிகர்களுடன் சேர்ந்து நேரில் கண்டு ரசித்தனர்.

10 அணிகள் பங்கேற்றுள்ள Indian Premier League 2026 தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் 7வது லீக் போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், Ruturaj Gaikwad தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, Shreyas Iyer தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது.

சென்னை சூப்பர் கிங்ஸ்: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கத்தில் சற்று மந்தமாக இருந்தாலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமான ஆட்டத்துடன் இன்னிங்ஸை கட்டுக்குள் வைத்தார். பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தியதால், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, ஆரம்பத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி ரன் வேகத்தை உயர்த்தினார். அவருக்கு மற்ற பேட்ஸ்மேன்களும் நல்ல ஆதரவு வழங்கியதால், போட்டி கடைசி ஓவர்கள் வரை பரபரப்பாக நீண்டது.

IPL match IPL Dhanush

ரசித்த பிரபலங்கள்: இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்கை எட்டியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியை காண சென்னை மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் தனுஷ், நடிகை மீனா, அஜித்தின் மனைவி ஷாலினி தோழியுடன் வந்திருந்தார். இவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் பிரபலங்களும் சிஎஸ்கே அணிக்கு உற்சாகம் அளித்தனர். அவர்கள் போட்டியை ரசித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X