»   »  எநோபாதோ... 'பர்பார்மன்ஸ்' காட்டி கௌதம் மேனனை ஈர்த்த மேகா ஆகாஷ்!

எநோபாதோ... 'பர்பார்மன்ஸ்' காட்டி கௌதம் மேனனை ஈர்த்த மேகா ஆகாஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த மேகா ஆகாஷ்?

Dhanush and Megha Akash come together for Yennai Nokki Paayum Thotta!

பாலாஜி தரணீதரனின் ஒரு பக்க கதை என்கிற படத்தில் ஏற்கெனவே இவர் நாயகியாக நடித்துள்ளார்.

இதுதவிர, இயக்குநர் சுசீந்தரனின் படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் அவரது நடிப்புத் திறனைக் கேள்விப்பட்டதாலும், எனை நோக்கி படத்துக்குப் புதுமுகம் தேவைப்பட்டதாலும் மேகா ஆகாஷை அந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிமும்முரமாக நடந்து வருகிறது.

அடுத்த இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை முடித்துவிடும் நோக்கில் வேகமாக படமாக்கி வருகிறார்கள்.

சமீபத்தில்தான் தனுஷ் தனது கொடி படத்தை முடித்தார். அந்தப் படம் கோடை விருந்தாக வரவிருக்கிறது.

    English summary
    Actress Megha Akash plays Dhanush's leading lady in filmmaker Gautham Vasudev Menon's Tamil action thriller "Enai Nokki Paayum Thota".

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil