தனுஷ் தவறவிட்ட பட வாய்ப்பு … பிரபல நடிகர் சொன்ன ஷாக் நியூஸ் !

சென்னை : நடிகர் தனுஷ் தவறவிட்ட பட வாய்ப்பு குறித்து பிரபல நடிகர் மனம் திறந்து கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என மொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தனுஷ்,திருச்சிற்றம்பலம், நானே வருவேன்,வாத்தி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நானே வருவேன்

நானே வருவேன்

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், நானே வருவேன் படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ். இதைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும், ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை தோழி ப்ரேமா, ரங் தே உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர்

ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய இளம் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் படங்களை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாம். இந்த படம் 1930 களில் நடப்பதை போன்ற கதையாம். வரலாற்று ஆக்ஷன் அட்வென்சர் படமாக தயாராக உள்ள இந்த படம் பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு கேப்டன் மில்லர் என டைட்டில் வைத்துள்ளார்களாம். தமிழ் சினிமா வரலாற்றிலேயே யாரும் தொடாத ஒரு கதையாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.

தனுஷ் தவறவிட்ட படம்

தனுஷ் தவறவிட்ட படம்

இந்நிலையில் , பிரபல நடிகர் பரத் அளித்துள்ள பேட்டியில், காதல் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிக்க தனுஷ் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஒரு சில காரணங்களால் தனுஷால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அடடா, காதல் படத்தில் தனுஷ் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்குமே என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்

Recommended Video

FIR படம் பார்த்து பாராட்டிய Dhanush, Udhaynithi | Vishnu Vishal Speech in FIR Pressmeet
வெற்றி படங்களில்

வெற்றி படங்களில்

ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமான பரத், செல்லமே, வெயில், எம் மகன், கண்டேன் காதலை போன்ற பல தரமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பரத் நடிப்பில் காளிதாஸ் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் பரத் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X