போதைப்பொருள் நபருடன் தொடர்பா?வதந்தி எங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது..விளக்கம் கொடுத்த தனுஷ் பட நடிகை!!
சென்னை: போதைபொருள் விவகாரத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகை சுரேகா வாணி விளக்கம் கொடுத்துள்ளார்.
தனுஷின் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமான சுரேகா வாணி, அடுத்ததாக சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் அமலாபாலுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
தற்போது இவர் தமிழ், தெலுங்கு துணைக் கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

போதை பொருள் வழக்கு: தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே.பி. சவுத்திரி, சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் வழக்கில் ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கே.பி. சவுத்திரியின் செல்போனை அலசியதில் முன்னணி பிரபலங்கள்,
நடிகைக்கு தொடர்பு: நடிகைகள் என பலரின் பெயரும் சிக்கியது. அதில் தெலுங்கு தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை சுரேகா வாணியின் பெயரும் சிக்கி உள்ளது. மேலும், இவரது மகளுக்கும் போதை பொருள் பயன்பாட்டிலும், விற்பனையிலும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் இணையதளத்திலும் புகைப்படத்துடன் செய்திகள் பரவ தொடங்கியது.

எதிர்காலத்தை பாதிக்கும்: இந்நிலையில்,நடிகை சுரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை சுரேகா வாணி போதை பொருள் சர்ச்சைக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை, தேவை இல்லாத இந்த வதந்தியால் எங்கள் வாழ்க்கை மிகவும் பாதிப்படைகிறது, மேலும் என் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, இந்த வதந்தி என்னையும், என் மகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.
வேண்டுகோள்: தேவையற்ற சர்ச்சைகளுக்குள் எங்களை இழுப்பதை நிறுத்துங்கள், தேவையில்லாத செய்திகளிலும், வீடியோக்களிலும் எங்கள் புகைப்படத்தையும், பெயர்களையும் பயன்படுத்துவதை ஊடகங்கள் நிறுத்தவேண்டும் என்று அந்த வீடியோவில் கையேடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











