முன்னாள் முதல்வரின் பேரனுடன் தனுஷ் பட ஹீரோயினுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்

மும்பை : தனுஷ் பட ஹீரோயினான மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு அரியானாவில் 3 முறை முதல்வராக இருந்த பஜன் லாலின் பேரன் பவ்யா பிஸ்னோயுடன் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.

Dhanush movie heroine getting engaged to former Chief Ministers grandson

தெலுங்கு நடிகையான மெஹ்ரீன், தமிழில் சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால், விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களிலும் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Dhanush movie heroine getting engaged to former Chief Ministers grandson

இவர் அதம்பூர் எம்எல்ஏ.,வான குல்தீப் பிஸ்னோயின் மகனான பவ்யா பிஸ்நோயை காதலித்து வந்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் ஜெய்பூர் அருகில் உள்ள ஆலிலா கோட்டை அல்லது ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் மார்ச் 13 ம் தேதி நடக்க உள்ளது.

கோவிட் 19 கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இவர்களின் நிச்சயதார்த்தம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்களின் திருமண தேதி முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கு முன் பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது காதலரான நிக் ஜோன்ஸ் திருமணமும் ஜோத்பூர் அரண்மனையில் தான் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அதே போன்று மெஹ்ரீனின் திருமணமும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X