படத்தின் தலைப்பு பிப்ரவரியில் தெரிந்துவிடும்... வதந்திகளை பரப்ப வேண்டாம்!
சென்னை : தனுஷ் நடித்து வரும் படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன, இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்று படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சுமாராக 64 நாட்கள் லண்டனில் நடந்து வந்த சூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றிருக்கிறது .

படம் இன்னும் முடிவடையாத நிலையில் சமூக வலைத்தளங்களில் இது தான் தலைப்பு, அது தான் தலைப்பு என்று பல தலைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு தற்போது ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் ஒய் நாட் ஸ்டூடியோஸ் 18வது தயாரிப்பின் கீழ் உருவாகி வரும் தனுஷின் 40வது படத்தின் தலைப்பு இதுதான் என பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டு இருக்கின்றன. அதை யாரும் பகிர வேண்டாம் என்று வேண்டுகொள் விடுகிறோம் என்று கேட்டுகொண்டனர் .
மேலும் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை ஜனவரி நடுவில் தான் முடியும் என்றும், அதிகாரபூர்வமான தலைப்பு பிப்ரவரி 2020ல் தான் வெளியாகும் அது வரை காத்திருங்கள் என்றும் படக்குழு கூறியுள்ளது. அடுத்ததாக படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், யார் யார் பணியாற்றுகிறார்கள் என்ற தகவலையும் படதயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது .

பெயரிடப்படாத இந்த படத்தில் தனுஷ் ,ஜஸ்வர்யா லஷ்மி, ஜேம்ஸ் காஸ்மோ, ஜோ ஜோ ஜார்ஜ், கலையரசன் மற்றும் பலர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கதையை எழுதி இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ் என்றும் மற்றும் படத்தில் பணியாற்றும் மற்றும் பலரை பற்றி குறிப்பிட்டு இருந்தது அந்த நிறுவனம்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் ஒரு சிறந்த தயாரிப்பாளர், அவர் பல நல்ல படங்களை தயாரித்துள்ளார். 2010ல் தமிழ் படம் மூலம் தயாரிப்பை துவங்கிய ஒய் நாட் ஸ்டூடியோஸ் பின் வா, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், காவியத் தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, தமிழ் படம் 2, கேம் ஓவர் ஆகிய படங்களை தயாரித்துள்ளது.
தயாரிப்பு ரீதியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது ஒரு சின்ன தவறு நடத்தாலும் அது படத்தை பாதித்து விடும் என்பதால் அவர் மிகுந்த கவனத்தோடு படத்தை தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு அடுத்து யோகி பாபுவின் 'மண்டேலா' , சமுத்திரகனியின் 'ஆலே' படங்களை தயாரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











