தனுஷ் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்கானது... படக்குழு அதிர்ச்சி!

சென்னை : நடிகர் தனுஷ் மாறன் படத்தின் வெளியீட்டை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்களின் சூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. அவரது ஜகமே தந்திரம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார் தனுஷ். ஆனால் இந்தப் படம் அவருக்கு ஏமாற்றத்தையே அளித்தது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

அடுத்ததாக இந்தியில் அவர் நடிப்பில் வெளியான கலாட்டா கல்யாணம் படம் அவருக்கு ஓரளவிற்கு கைக்கொடுத்தது. இந்தப் படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராயுடன் அவர் மீண்டும் 3வது முறையாக இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ளள தி க்ரே மேன் வரும் ஜூலையில் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

சொதப்பிய மாறன்

சொதப்பிய மாறன்

அவரது அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் மாறன் படமும் ஓடிடியிலேயே வெளியானது. இந்தப் படமும் சிறப்பான விமர்சனங்களை பெறவில்லை. இந்தப் படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார் தனுஷ். படம் எந்தவிதமான வரவேற்பையும் ரசிகர்களிடையே பெறாமல் முடங்கியுள்ளது.

இறுதிக்கட்டத்தில் திருச்சிற்றம்பலம்

இறுதிக்கட்டத்தில் திருச்சிற்றம்பலம்

இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி என இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் வாத்தி படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

வெளியானது சூட்டிங் ஸ்பாட் வீடியோ

வெளியானது சூட்டிங் ஸ்பாட் வீடியோ

இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது நித்யா மேனன், தனுஷ் நடித்துள்ள திருவிழா செட்டப்பில் அவர்கள் நடனமாடும் சூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையதளத்தில் லீக்காகியுள்ளது தனுஷ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் சன் பிக்சர்சும் அதிர்ச்சியடைந்துள்ளது.

கைக்கொடுக்குமா திருச்சிற்றம்பலம்?

கைக்கொடுக்குமா திருச்சிற்றம்பலம்?

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் தனுஷுடன் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தொடர்ந்து வெற்றியை தவறவிட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் அதற்கு கைக்கொடுக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X