தனுஷ் தொப்பியில் மேலும் ஒரு சிறகு... மோகன் ஹிட்ஸ், இளையராஜா ஹிட்ஸ் வரிசையில் இப்போ தனுஷ் ஹிட்ஸ்!
தனுஷ் ஹிட்ஸ் எனும் தேடல் வார்த்தைகள் தற்போது இணையத்தில் டிரெண்டிங்காகியுள்ளது.
சென்னை: தனுஷ் படப் பாடல்கள் எப்போதுமே தனித்துவமாக இருப்பதற்கு, அவருடைய இசை ஞானம் தான் காரணம் என்கின்றனர் திரையுலகினர்.
நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பண்முக திறமை கொண்டவர் தனுஷ். இந்த திறமை தான் அவரை ஹாலிவுட் வரை அழைத்து சென்றிருக்கிறது. அப்பாவும், அண்ணனும் திரையுலகில் பெரிய ஜான்பவான்கள். மாமனார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இந்த அடையாளங்களை எல்லாம் தாண்டி தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திருப்பதே தனுஷின் வெற்றி.
''வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே' தொடங்கி சமீபத்திய சூப்பர் டூப்பர் ஹிட்டான ரவுடி பேபி வரை தனுஷ் படங்களின் பாடல்கள் தனித்துவமானவை. இசையமைப்பாளருக்கு தான் இந்த பெருமை என்றாலும், மோகன் ஹிட்ஸ் போல தனுஷ் ஹிட்சும் இப்போது டிரெண்டிங்காகி வருகிறது. தனுஷ் படங்களில் இடம்பிடித்த சூப்பர் ஹிட் பாடல்களில் ஒரு சில வற்றை பற்றி இப்போது பார்க்கலாம்.

விஜபி பாடல்:
தனுஷ் படங்களில் எத்தனையோ ஹிட் பாடல்கள் இருந்தாலும், நம் மனதுக்கு எப்போதும் நெருக்கமான பாடல் விஜபி படத்தில் வரும் 'அம்மா அம்மா நீ எங்க அம்மா... உன்னவிட்டா எனக்காரு அம்மா ' தான். அனிருத் இசையில் ஜானகி அம்மா குரலில், தனுஷ் எழுதிய இந்த பாடல், கேட்கும் போதெல்லாம் மனதை நெகிழச் செய்யும்.

ஒய் திஸ் கொலைவெறி:
தமிழ் சினிமாவின் டிரெண்டையே மாற்றிப்போட்டது 'ஒய் திஸ் கொல வெறி' பாடல். அருனித்தும் தனுஷும் முதல் முறையாக ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த பாட்டுக்கு சூப் சாங் என பெயர் வைத்தனர். தமிழும் ஆங்கிலமும் கலந்து தனுஷ் எழுதிய இந்த பாடல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வரை பாராட்டு பெற்றது. அந்த பாட்டுக்கு பிறகு தான் தனுஷ் முழுநேர பாடலாசிரியர் ஆனார்.

மாரி 2 :
தனுஷின் ஹிட் லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்த பாட்டு ரவுடி பேபி. பல கோடி முறை யூடியூபில் பார்க்கப்பட்ட பெருமை இந்த பாட்டுக்கு உண்டு. யுவன் இசை. பிரபுதேவா நடன அமைப்பு. தனுஷ், சாய் பல்லவி டான்ஸ் என இந்த பாடலின் சிறப்பை பற்றி பேசிக்கொண்ட இருக்கலாம். சிறுவர்கள் முதல் பெரியவர் வரை வயது வரம்பின்றி ரசிக்கப்பட்டு வரும் பாடல் இது.

கருவாட்டுக் குழம்பா:
திருடா திருடி 'மன்மத ராசா', பொல்லாதவன் 'மின்னல்கள் கூத்தாடும்', ஆடுகளம் 'வெள்ளாவி வெச்சு தான் வெளுத்தாங்களா' என தனுஷின் ஹிட் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். இதில் எல்லோருக்குமான பேவரைட் பாடல்கள் பல உண்டு. அதில் ஒன்று, யாரடி நீ மோகினி படத்தில் வரும் 'வெண்மேகம் பெண்ணாக உருவானதோ'. இப்படி தனுஷின் பாடல்கள் 'கருவாட்டுக்குழப்பா' உசுப்பேற்றக் கூடியவை தான். எங்களுக்கு பிடிச்ச பாடல்களை லிஸ்ட் போட்டுட்டோம். உங்களுக்கு பிடிச்ச பாடல்களை ப்ளே லிஸ்ட்டில் ஆட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications











