தனுஷ், மிருணாள் தாக்கூர் திருமணமா? என்ன ஐடியாவில் இருக்காங்க.. பிரபலம் கொடுத்த விளக்கம்!

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து பாலிவுட் இயக்குநர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டின் கடைசியில் நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு பரவி வருகிறது. இதற்கு காரணம் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளானது. அந்த போட்டோவில், இருவரும் நெருக்கமாக இருந்ததால், இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் பரவின.இந்த கிசுகிசுவை இருவரும் கண்டுகொள்ளலாத நிலையில், தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், காதலர் தினத்தன்று அதாவது பிப்ரவர் 14ந் தேதி இவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. இந்த செய்தி பற்றி, இருவரும எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கின்றனர்.

Dhanush Mrunal Thakur marriage

எல்லாமே வதந்தி: இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய தனுஷூக்கு மிகவும் நெருக்கமான பாலிவுட் இயக்குநர், இரண்டாம் திருமணம் செய்து கொள்வது பற்றி தனுஷ் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நாங்கள் இருவரும் தினமும் ஃசெல்போனில் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படியே திருமணம் செய்து கொள்வார். விவகாரத்து நடந்தபோது மகன்கள் யாத்ரா, லிங்கா விஷயத்தில் சேர்ந்து இருப்போம் என தனுஷும ஐஸ்வர்யாவும் முடிவு செய்து இருக்கிறார்கள். தனுஷை பொறுத்தவரை அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அதற்கு காரணம் மகன்கள் தான். மகன்கள் மீது அவர் மிகவும் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறார். மிருணாள் தாக்கூர் மற்றும் தனுஷ் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். நண்பராக இருக்கிறார்கள் என்பதற்காக திருமணம் கொள்ளப் போகிறார்கள் என்று எப்படி சொல்ல முடியும். விசமிகள் இப்படித்தான் தேவையில்லாததை பரப்புவார்கள் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X