Kubera: தகர்க்கப்படுமா அமரன் ரெக்கார்ட்ஸ்? தனுஷ் ரசிகர்களே தயாரா இருங்க.. ரிலீஸ் தேதி குறிச்சாச்சு
சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே தவிர்க்க முடியாத நடிகர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராயன். இந்தப் படத்தினை தானே இயக்கி தானே நடிக்கவும் செய்திருந்தார். மேலும் இந்தப் படம் இவரது 50வது படம். இந்தப் படம் வசூலில் சுமார் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்ததால், படம் வசூலில் வெற்றிப் படமாக மாறியது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குபேரா. இந்தப் படம் நேரடி தமிழ் படமாகவும் நேரடி தெலுங்குப் படமாகவும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் தெலுங்கில் சார் எனவும் அதேபடம் தமிழில் வாத்தி என்ற பெயரிலும் வெளியானது. இந்நிலையில் குபேரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் திரைத்துறையில் பரவலாக பேசப்படுகின்றது.
தெலுங்கு இயக்குநரும் தேசிய விருது பெற்ற இயக்குநருமான சேகர் கமுலாவின் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் நடிகர் நாகார்ஜுனாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 51வது படமாக வெளியாகவுள்ள குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தத் தகவல்கள் ஏற்கனவே படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும்போது, படக்குழு தரப்பில் இருந்து புதிய போஸ்டரும் புதிய அறிவிப்பும் வெளியானது.

டீசர்: அதாவது நவம்பர் 15ஆம் தேதி படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்தது. குபேரா படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முழுவதுமாக முடிந்து விட்டதாக கூறப்படுகின்றது. ஓரிரு நாட்களில் அதிக பட்சம் ஒரு வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகின்றது. குபேரா தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக ரிலீஸ் ஆவது மட்டும் இல்லாமல், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் படத்தினை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது.

பொங்கலுக்கு முன்: இந்நிலையில் படத்தினை வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது தீபாவளி முடிந்து விட்டதால், அடுத்த பெரிய ரிலீஸ் என்பது பொங்கல்தான். எனவே, பொங்கலுக்கு பெரிய படங்கள் வரும் என்பதாலும், குபேரா படத்தினை ஏற்கனவே பொங்கலுக்கு முன்னர் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ரிலீஸ்: எனவே குபேரா படத்தினை டிசம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும் என படக்குழு முடிவு செய்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, பொங்கலுக்கு இரண்டு வாரங்கள் இடையில் இருப்பதால் படம் இரண்டு வாரங்களில் வசூல் வெற்றி பெற்றுவிடும் எனவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தகவலைத் தெரிந்து கொண்ட தனுஷ் ரசிகர்கள், அமரன் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் ரெக்கார்ட்களை முறியடித்தே ஆகவேண்டும் என பேசி வருவதாகவும் கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











