Kuberaa Ticket Booking: டிக்கெட் புக்கிங்கில் பெக்கராகவே இருக்கும் குபேரா.. தனுஷ் படத்துக்கு என்ன பிரச்னை?

சென்னை: தனுஷ் நடிப்பில் நாளை மறுநாள் அதாவது வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் குபேரா. தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ள இந்த படத்தின் புக்கிங் கடந்த 16 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே இடையில் உள்ள நிலையில் படத்தின் புக்கிங் மிகவும் மந்தமாக உள்ளது.

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் தனது ரசிகர்களை நோக்கி ஒரு செங்கல்லைக் கூட அசைக்க முடியாது என பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார். படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படம் மொத்தம் 181 நிமிடங்கள் ஓடவுள்ளது. அதாவது மொத்தம் 3 மணி நேரம் படம் ஒடவுள்ளது.

Dhanush Nagarjuna Rashmika Mandhanna Kuberaa Movie Ticket Booking Very Bad In Tamil Good In Telugu

குபேரா புக்கிங்: படத்தின் புக்கிங் நேற்று முன் தினம் அதாவது 16ஆம் தேதியே தொடங்கிவிட்டது. ஆனால் படத்திற்கு தமிழ்நாட்டில் காலை 9 மணி காட்சிக்கு பல தியேட்டர்களில் காட்சிகள் ஒதுக்கப்படவில்லை. பெரும்பான்மையான தியேட்டர்களில் மதியம் 12 மணிக் காட்சிக்குத்தான் ஸ்லாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் பி.வி.ஆர். தியேட்டர்களிலும் இதுவரை குபேரா படத்திற்கான புக்கிங் ஓபன் செய்யப்படமலே உள்ளது.

அமெரிக்கா ப்ரீமியர்: அமெரிக்காவில் 19ஆம் தேதியே படம் ரிலீஸ் ஆகிறது என்பதால் அங்கு வெகு சிறப்பாக புக்கிங் எல்லாம் நடைபெற்று ரிலீஸ்க்கு முன்னரே நல்ல வசூலைக் குவித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களை கவர தனுஷ், தெலுங்கு சினிமா ரசிகர்களைக் கவர நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா என பெரும் ரசிகர்கள் பட்டாளமும் இந்த படத்திற்காக காத்துக் கொண்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் ஒரு நாள் முன்னரே படம் பார்க்கும் ரசிகர்களின் விமர்சனத்திற்காகவும் இந்திய ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

Dhanush Nagarjuna Rashmika Mandhanna Kuberaa Movie Ticket Booking Very Bad In Tamil Good In Telugu

தூள் கிளப்பும் தெலுங்கு: தமிழில் படத்திற்கு புக்கிங் சுமாராகவே சென்றாலும் தெலுங்கில் படத்திற்கு புக்கிங் வெகு சிறப்பாகவே உள்ளது. மேலும் அங்கு காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடைத்தால் படத்தின் வசூல் முதல் நாளே சிறப்பாக இருக்கும் என படக்குழு எதிர்பார்த்துக் கொண்டு உள்ளது. மொத்தத்தில் குபேரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X