Kuberaa Box Office: ரிலீஸாகி ஒரு வாரம் ஆச்சு.. பாக்ஸ் ஆபிஸில் கொட்டிய பணமழை.. ஆனாலும் வருத்தத்தில் தனுஷ்?

சென்னை: நடிகர் தனுஷின் 51வது படம் குபேரா. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா எழுதி இயக்கிய இந்த படத்தில் தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது ஜூன் 20ஆம் தேதி ரிலீஸானது. படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாக்கப்பட்டு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. படம் பான் இந்தியா படத்திற்கான கதைக்களத்தை கொண்டிருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் படத்தின் முதல் வார வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

குபேரா படத்தின் முதல் போஸ்டர் வெளியானதில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. காரணம் தனுஷ் தென்னிந்திய சினிமாவில் கமர்ஷியல் கதாநாயகனாகவும் பெர்ஃபார்மிங் கதாநாயகனாகவும் கலக்கிக் கொண்டு உள்ளார் என்பதால் இந்த படத்தில் அவரது அட்டகாசமான பர்ஃபாமன்ஸ் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பே அதற்கு காரணம். இது மட்டுமல்லாமல் குபேரா படத்தில் நாகர்ஜுனா இணைகிறார் என்ற தகவல் வந்ததுமே படத்தின் மீது மேலும் கவனம் குவிந்தது. படத்தில் நாகர்ஜுனா வில்லனா என்றெல்லாம் கேள்விகளாக இருந்தது.

தனுஷ்க்கு இருந்த நம்பிக்கை: அதேபோல் ராஷ்மிகா மந்தனா இணைந்ததால் படத்தை கன்ஃபார்ம் ஹிட் என்ற வரிசையில் ரசிகர்கள் குறிப்பாக தெலுங்கு ரசிகர்கள் வைக்க ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே தனுஷ் நேரடியான தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார். அது தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் வெளியானது. இந்த படம் தனுஷ்க்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்ததால், குபேரா படமும் அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுக்கும் என பேசப்பட்டது.

Dhanush Nagarjuna Sekhar Kanmula Kuberaa Movie Box Office Collection Goes Well But Dhanush Upset
Photo Credit:

தனுஷால் தப்பித்த: குபேரா படத்தின் கதைக்கு படத்தின் மொத்த நீளம் சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் இருந்ததாகவும், அதனை இறுதியாக 3 மணி நேரமாக குறைத்ததாகவும் கூறப்பட்டது. படம் 3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடியது. படத்தின் முதல் பாதியே ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கும் அளவுக்கு இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி படமானது முதல் பாதி படத்தைப் போல சுவாரஸ்யமாக இல்லாததால் அது விமர்சனத்துக்கு உள்ளானது. மொத்தத்தில் படத்தில் தனுஷின் நடிப்பு பிரமாதமாக இருந்ததால் இரண்டாம் பாதியில் இருந்த தொய்வு படத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

வசூலும் தனுஷின் வருத்தமும்: இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. மொத்த படக்குழுவும் படத்தின் வசூல் குறித்து மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஆனால் தனுஷ் மட்டும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் அதிகப்படியான வசூல் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் வசூல் ஆனது. தமிழ்நாட்டில் குபேரா படக்குழு எதிர்பார்த்த வசூலைக் குவிக்காததால் தனுஷ் வருத்தத்தில் உள்ளார் என கூறப்படுகிறது. மேலும் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனாவால்தான் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வசூல் ஆனாது என இணையவாசிகளும் தனுஷை கலாய்த்து வருகிறார்கள். படம் வெளியாகி 5வது நாளிலேயே ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது என படக்குழு தெரிவித்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X