Kuberaa Box Office: குபேரா நடத்திய வசூல் வேட்டை.. இரண்டாவது நாளில் இத்தனை கோடிகளுக்கு அதிபதியா?
சென்னை: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி நேற்று முன் தினம் அதாவது ஜூன் 20ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் குபேரா. பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
குபேரா தனுஷின் 51 வது படம். தனது 50 வது படமான ராயன் படத்தை இவரே எழுதி இயக்கி இருந்தார். ராயன் வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறியது. பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிகள் வசூல் செய்தது என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் முதல் படம் குபேரா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக இயக்குநர் சேகர் கம்முலாவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதேபோல் படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பல ஸ்டார்களும் நடித்திருப்பதால் படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
படத்தில் தனுஷ் பிச்சை எடுத்து வாழ்பவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் தனது கதை சொல்லல் முறையில் பிச்சை எடுத்து வாழ்பவர்களின் வாழ்க்கையை கூடுமானவரை உண்மைக்கு நெருக்கமாக காட்டியுள்ளார். படம் 3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடுவதும், இவ்வளவு நேரம் கதையை எடுத்துச் செல்வதற்காக படத்தின் திரைக்கதையை சகட்டு வளைத்துக் கொண்டது படத்தின் மைனஸாக பார்க்கப்படுகிறது.

குபேரா நேர்மறை - எதிர்மறை: தனுஷின் நடிப்பு பாராட்டப்படுகிறது, மற்ற நடிகர்களின் நடிப்பும் பாராட்டப்படுகிறது, இதுமட்டுமில்லாமல் தேவி ஸ்ரீ பிரசாத் இசை கௌரவிக்கப்படுகிறது, படம் டெக்னிக்கலாகவும் சிறப்பாக இருப்பதாக பாராட்டப்படும் இந்த படத்தில் நேரமும் ஜவ்வு போல இழுக்கப்பட்ட திரைக்கதையும் லாஜிக்கே இல்லாத சில காட்சிகளையும் ரசிகர்களும் விமர்சகர்களும் விமர்சித்து வருகிறார்கள். ]
இரண்டாவது நாள் வசூல்: இந்நிலையில் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 14. 75 கோடிகள் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இரண்டாவது நாளில் படத்தின் வசூல் படக்குழுவினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்துள்ளது. அதாவது இரண்டாவது நாளில் முதற்கட்ட தகவல் படி, பாஸ் ஆபிஸில் முதல் நாளை விடவும் கூடுதலாக வசூல் குவித்துள்ளது. மேலும் இந்த வசூல் என்பது இந்திய அளவில் மட்டும் தான். அதாவது படம் இரண்டாவது நாளில் ரூபாய் 16 கோடிகள் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியில் படக்குழு: இந்த வசூல் கணக்கில் மாறுதல்கள் இருக்கலாம். இரண்டாவது நாளே படக்குழுவுக்கு ஏறுமுகமான வசூல் என்றால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிடிவான அப்ரோச் இருப்பதாக படக்குழு நம்புகிறது. இதுமட்டுமில்லாமல், வார இறுதி நாள் மற்றும் மூன்றாவது நாளான இன்று படத்திற்கு மேலும் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்புகிறது. படம் வணிக ரீதியாக வெற்றிப் படம் என்ற இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என திரைத்துறையில் பேச்சுகள் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











