Kuberaa Box Office: வெற்றி விழா கொண்டாடியாச்சு.. பாக்ஸ் ஆபிஸில் குட்டியக்கரணம் போடுதே.. வசூல் நிலவரம் இதோ!

சென்னை: நடிகர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த 20ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் குபேரா. தெலுங்கு சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலா இந்த படத்தை இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியானது. படம் வெளியாகி, இன்றுடன் அதாவது ஜூன் 25 ஆம் தேதியுடன் ஆறு நாட்கள் ஆகிறது. இந்நிலையில் முதல் ஐந்து நாளில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன என்பது குறித்து காணலாம்.

குபேரா படத்தை பொறுத்தவரையில் பிச்சைகாரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டும், பணக்காரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷ், பிச்சைக்காரராக நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் படத்தில் வலது கை விரல்கள் பாதிக்கப்பட்டவராகவும் தனுஷ் சிறப்பாக நடித்துள்ளார். வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருந்து இந்த படம் மிகவும் வித்தியாசப்பட்டு நிற்கிறது.

படத்தின் புரோமோசன் தொடங்கி, படம் வெளியாகி வெற்றி விழா கொண்டாடப்பட்ட போதும் சரி, பலரும் பாராட்டியது தனுஷின் நடிப்பைத்தான். வெற்றி விழாவில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, இந்த படத்தின் கதையை என்னிடம் சொல்லி இருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன். ஆனால் தனுஷ், இந்த படத்தில் நடித்தது மட்டுமல்லாமல், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்" எனக் கூறினார்.

Dhanush Nagarjuna Sekhar Kanmula Kuberaa Movie Day 5 Box Office Collection Details
Photo Credit:

தனுஷ்க்கு தேசிய விருது: அதேபோல் படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியபோது, " புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும் எனக் கூறினேன். அதேபோல் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல் குபேரா படத்திற்காகவும் தனுஷ்க்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று கூறுகிறேன் எனக் கூறி தனுஷை பாராட்டினார். படத்தில் தனுஷின் நடிப்பு பாராட்டுக்குரியது என்றாலும், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் படத்தில் உள்ள சில சொதப்பல்களை சுட்டிக் காட்டாமல் இல்லை.

படத்தின் மைனஸ்: குறிப்பாக படத்தின் நீளம், தேவையற்ற பல காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் என ரசிகர்கள் சுட்டிக் காட்டிய விஷயங்களையும் படக்குழு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முதல் பாதியை பிரமாதப்படுத்திய இயக்குநர், இரண்டாவது பாதியில் ஆங்காங்கே பல ஓட்டைகளை ஏற்படுத்திவிட்டார். இசை, நடிப்பு, முதல் பாதி வரையிலான திரைக்கதை என பல விஷயங்கள் பாராட்டப்பட்டாலும் இரண்டாம் பாதி படம் சொதப்பல் தான்.

Dhanush Nagarjuna Sekhar Kanmula Kuberaa Movie Day 5 Box Office Collection Details
Photo Credit:

வசூல்: படத்திற்கு முதல் மூன்று நாட்களுக்கு நல்ல வசூல் இருந்தது. இது வழக்கமாக அனைத்து படங்களுக்கும் நடப்பதுதான். அதேபோல் நான்காவது நாளில் இருந்து அதாவது, வார நாட்களில் இருந்து குபேராவுக்கு வசூல் கணிசமான அளவே கிடைத்து வருகிறது. இந்நிலையில் முதல் ஐந்து நாளில் படம் ரூபாய் 60.90 கோடிகள் வசூல் செய்துள்ளதாக சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. ஐந்தாவது நாளில் படம் ரூபாய் 5.5 கோடிகள் வசூல் செய்துள்ளது. இந்த வசூல் மதிப்பு என்பது இந்தியா முழுவதுக்குமானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் படத்தின் வெளிநாட்டு வசூலும் உள்ளது என்பதால் படத்தின் மொத்த வசூல் படக்குழுவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து படக்குழு தரப்பில் எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X