twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜகமே தந்திரம் டீசரில் புறக்கணிக்கப்பட்ட தனுஷின் பெயர்.. இதுதான் காரணமா? பரபர தகவல்!

    |

    சென்னை: ஜகமே தந்திரம் படத்தின் டீசரில் தனுஷின் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'.

    7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!

    இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளர்.
    ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    தியேட்டரில்தான் ரிலீஸ்

    தியேட்டரில்தான் ரிலீஸ்

    லாக்டவுனுக்கு முன்பே இப்படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இதனால் லாக்டவுன் நேரத்தில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் தனுஷ் ரசிகர்கள் படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ரசிகர்கள் கோரிக்கை

    ரசிகர்கள் கோரிக்கை


    போஸ்டர் ஒட்டியும் பேனர் வைத்தும் ஜகமே தந்திரம் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்டு வந்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் அதே கோரிக்கையை முன் வைத்தனர்.

    தனுஷுக்கு உடன்பாடில்லை

    தனுஷுக்கு உடன்பாடில்லை

    இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தனுஷுக்கு உடன்பாடு இல்லை என தெரிகிறது.

    கருத்து வேறுபாடு

    கருத்து வேறுபாடு

    இதனால் தமிழகத்தில் மட்டும் தனது செலவில் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொண்டாராம் தனுஷ். ஆனால் அதற்கும் தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் தனுஷுக்கும் தயாரிப்பு தரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தனுஷ் பெயர் இல்லை

    தனுஷ் பெயர் இல்லை

    இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய இந்த டீசரில் தனுஷின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் பெரிய விலைக்கு போக தனுஷ்தான் காரணம் என்றும் அவரது பெயர் இல்லாமல் எப்படி டீசரை வெளியிடலாம் என்றும் விளாசி வருகின்றனர்.

    அதிக விலைக்கு விற்பனை

    அதிக விலைக்கு விற்பனை

    ஆனால் தனுஷுக்கும் தங்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் தனுஷுக்கு முக்கியத்துவம் அளித்துதான் டீசர் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸில் 55 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Dhanush name is not in Jagame Thanthiram teaser. Dhanush is not willing to release his film in OTT platform.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X