NEEK Blue Sattai Maran: தனுஷ் டைரக்ஷனுக்கு ப்ளூ சட்டை மாறன் போட்ட மார்க்.. Good-ஆ இல்லை Bad-ஆ?
சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகி நேற்று அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்( NEEK ). இந்த படத்தினை தனுஷ் தயாரிக்கவும் செய்துள்ளார். தனுஷின் அக்கா மகன் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ் என பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " காதல் தோல்வியால் வருத்தத்தில் உள்ள கதாநாயகனை அவரது அம்மா மற்றும் அப்பா, ஆறுதல் கூறி திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள். பெண் பார்க்க போன இடத்தில் பள்ளிக் கால தோழியை பார்க்கிறார். அதன் பின்னர் இருவரும் நன்கு பழகுகிறார்கள். அப்போது இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு பிடித்துப் போகிறது. அப்போது கதாநாயகனின் முன்னாள் காதலியின் திருமண அழைப்பு வருகிறது. திருமணத்திற்கு நண்பர்களுடன் கதாநாயகன் போகிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை.

படத்தின் கதை குறித்து இயக்குநர் வழக்கமான காதல் கதை எனக் கூறி முன் ஜாமீன் வாங்கிக் கொள்கிறார். எனவே கதை குறித்து எதுவும் கூற முடியாது. திரைக்கதையாக இந்த படம் எப்படி இருந்தது என்றால், படம் ரொம்பவும் ஸ்லோவாக இருந்தது. ஸ்லோவாக இருந்ததே தவிர போர் எல்லாம் அடிக்கவில்லை. ஒரு மிதமான ஸ்பீட்லையே படம் போய்க்கொண்டு இருந்தது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்பீடாக இருந்தது. படம் முடியும் போது தான், சில டிவிஸ்ட்டுகளை வைக்கிறேன் என இழுவை ஆகிவிட்டது.

தனுஷ் குடும்பம்: படத்தில் ஹீரோ புதிது என்பதால், அவர் ஒருவரே மொத்த கதையையும் தாங்க முடியாது என்பதால், அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். அனைவருக்கும் ஸ்கோர் செய்ய நல்ல வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். கதாநாயகன் தனுஷ் குடும்பத்தில் இருந்து வந்துள்ளார். தனுஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனுஷ் போல நடிப்பார் என்று கூறமுடியாது. ஓரளவுக்கு நன்றாக நடித்திருந்தார். இன்னும் பயிற்சியும் முயற்சியும் தேவை.

குழப்பம்: படத்தின் கதை வழக்கமான காதல் கதை என்றாலும், அங்காங்கே காமெடிகளை போட்டு படத்தை நகர்த்திக் கொண்டு போயுள்ளார்கள். இரண்டாம் பாதியில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. எமோஷ்னலான சீன்கள் எல்லாம் காமெடியாகவும் காமெடியான சீன்கள் எல்லாம் எமோஷ்னலாகவும் எடுத்துள்ளார்கள். இந்த இடத்தில் குழம்பியுள்ளார்கள். படம் மேக்கிங்காக நன்றாக இருந்தது. ஒளிப்பதிவு, பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்தும் அருமை. ஒரு பாடலுக்கு வி.எஃப். எக்ஸ் செய்துள்ளார்கள். மாடர்ன் லவ் ஸ்டோரி என எடுத்து வைத்துள்ளார்கள், காதலில் என்ன மாடர்ன் இருக்கப்போகிறது. காதல் காதல் தானே.

ஓ.கே: மாடர்ன் என அவர்கள் நினைத்துக் கொண்டது என்னவென்றால், படத்தில் வரும் அனைத்து பெண் கதாபாத்திரங்களும் சரக்கு அடிக்கிறார்கள், அதைத்தான் அவர்கள் மாடர்ன் என நினைத்துக் கொண்டு உள்ளார்கள். ஒரு சில காட்சிகள் சினிமாத்தனமாக தான் இருந்தது. இளைஞர்களை இந்தப் படம் கட்டாயம் கவரும், சில காட்சிகளை சிறப்பாக செய்திருந்தால் அனைவரும் ரசிக்கும் படமாக மாறியிருக்கும் . இப்போது ஓ.கே. ரகமான படமாக உள்ளது" என தெரிவித்துள்ளார். இவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











