NEEK Booking: தனுசு படம்னா சும்மாவா.. புக்கிங்கில் தெறிக்கவிடும் ரசிகர்கள்.. மாஸ் ஓப்பனிங் இருக்கு!

சென்னை: நாளை அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படங்களில் பலரது எதிர்பார்ப்பில் உள்ள படம் என்றால் அது NEEK, அதாவது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்தான். தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இவரது இயக்கத்தில் வெளியாகவுள்ள மூன்றாவது படம் என்பதால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளார்கள். இப்படியான நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் புக்கிங் எப்படி உள்ளது என இந்தத் தொகுப்பில் காணலாம்.

சம காலத்து இளம் தலைமுறையினரின் காதல் கதையை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டிரைலரில் தனுஷ் சொல்லும்போது கூட, ஜாலியா வாங்க, ஜாலியா போங்க எனக் கூறினார். அதே நேரத்தில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், இந்தப் படத்திற்கு இசையமைத்ததற்காக நான் இன்னும் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று எனக்கு நன்றாக தெரியும். ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பின்னர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தில் பணியாற்றியவர்களை அழைத்து, அவர்களுக்கு கார்கள் பரிசாக கொடுத்தார். இந்தப் படமும் வெற்றி பெறும், எனவே எனக்கும் அதுபோல பரிசுகள் வேண்டும் எனக் கூறினார்.

Dhanush NEEK NEEK Booking NEEK Pre Booking

மேலும் படம் பார்த்த இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா படம் குறித்து பேசுகையில், " படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அருமையாக உள்ளது. தனுஷ் எப்படி இப்படி ஒரு கதையை யோசித்தார், எடுத்தார் என எனக்கு வியப்பாக உள்ளது. படம் பிளாக் பஸ்ட்டர் ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை" எனக் கூறினார்.

NEEK: படத்தில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக அனிகா ராஜேந்திரன் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் படத்தில் பவிஷ் நாராயண், ரபியா, வெங்கடேஷ் மேனன், மேத்யூ தாமஸ் போன்ற இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது, மிகவும் ஆர்தடாக்ஸ் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

Dhanush NEEK NEEK Booking NEEK Pre Booking

தனுஷ்: படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் தனுஷ் சில தினங்களுக்கு முன்னர் கிளம்பி வெளி நாடு போய்விட்டார். அங்கு அவரது நடிப்பில் உருவாகும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நாளை நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்தின் புக்கிங் எப்படி உள்ளது என்ற ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் படம் சுமார் 350 க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் ரிலீஸ் ஆகிறது.

Dhanush NEEK NEEK Booking NEEK Pre Booking

புக்கிங்: படத்திற்கு இதுவரை கனிசமான அளவே புக்கிங் ஆகியுள்ளது. அதேநேரத்தில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சிக்கான 98 சதவீத டிக்கெட்டுகள் புக் ஆகியுள்ளது. மேலும் சென்னையின் பல்வேறு தியேட்டர்களில் முதல் நாளுக்கான பெரும்பாலான காட்சிகளில் 50 சதவீதத்திற்கும் மேலாக டிக்கெட்டுகள் புக் ஆகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கணிசமான அளவிற்கு டிக்கெட்டுகள் புக் ஆகி உள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் படம் ரிலீஸ் ஆன பின்னர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். அதே நேரத்தில் சில தியேட்டர்களில் புக்கிங்கே தொடங்காமல் உள்ளது.

Dhanush NEEK NEEK Booking NEEK Pre Booking
Dhanush NEEK NEEK Booking NEEK Pre Booking

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X