Dhanush: ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் தனுஷ்... நெல்சனுக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்... விரைவில் அப்டேட்
சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
கேப்டன் மில்லர் படப்பிடிப்பை முடித்துவிட்ட தனுஷ், தற்போது அவரே இயக்கி நடிக்கும் D 50 படத்தில் பிஸியாகிவிட்டார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனுஷின் புதிய படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் தனுஷ்
கோலிவுட்டின் பிஸியான நடிகர்களில் ஒருவரான தனுஷ், அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லரில் நடித்துவிட்ட அவர், மீண்டும் அவருடன் இன்னொரு படம் பண்ண கால்ஷீட் கொடுத்துள்ளார். இன்னொருபக்கம் தானே இயக்கி நடிக்கும் தனது 50வது படத்திலும் பிஸியாகிவிட்டார்.
தனுஷின் D 50 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்திலும், தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்தப் படங்களின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாம். இந்நிலையில் தனுஷின் புதிய படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என அடுத்தடுத்து படங்கள் கொடுத்து கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாஸ் காட்டி வருகிறார் நெல்சன். இதனால் நெல்சனுடன் இணைய தனுஷ் விருப்பம் தெரிவித்திருந்தாராம். இதனையடுத்து நெல்சன் சொன்ன கதையும் பிடித்துவிட, விரைவில் இணையலாம் என க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி தனுஷ், நெல்சன் கூட்டணியில் அனிருத்தும் இணைந்துள்ளாராம்.
முக்கியமாக இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரின் படங்களை தயாரித்து வருகிறது ராஜ்கமல் ஃபிலிம்ஸ். இந்த வரிசையில் தற்போது தனுஷையும் சேர்த்துவிட உலகநாயகன் முடிவு செய்துவிட்டாராம்.
இதனையடுத்து தனுஷ் - நெல்சன் இணையும் படத்தின் அப்டேட்டை வெளியிட ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ரெடியாகிவிட்டதாக தெரிகிறது. தனுஷின் கேப்டன் மில்லர் ரிலீஸுக்கு முன்பே இந்த அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கமலுடன் தனுஷ் முதன் முறையாக இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











