Dhanush Net Worth: பல 100 கோடிகளில் தனுஷின் சொத்து மதிப்பு... கார்களின் மதிப்பே தலை சுற்ற வைக்குதே!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருபவர் தனுஷ்.

இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் தனுஷுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

அதேபோல் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக கேப்டன் மில்லர் படத்தின் டீசரும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தனுஷின் சொத்து மதிப்பு, சம்பளம், கார்களின் விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Dhanush Net Worth: Actor Dhanushs Salary, Net Worth and Cars details

தனுஷ் சொத்து மதிப்பு இத்தனை கோடியா: துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். ஹீரோக்களுக்கான எந்தவொரு அடையாளமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமான தனுஷ், இன்று ஹாலிவுட் வரை மாஸ் காட்டி வருகிறார். ஆரம்ப காலங்களில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை என அண்ணன் செல்வராகவன் தயவில் நடித்து வந்தார் தனுஷ்.

அதன்பின்னர் பாலுமகேந்திரா, வெற்றிமாறன், கேவி ஆனந்த், போன்ற சீனியர் டைரக்டர்களின் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக மாஸ் காட்டத் தொடங்கினார். அதேபோல் பவர் பாண்டி படம் மூலம் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்தார். பாலிவுட்டில் இயக்குநர் ஆனந்த் எல் ராய், ஹாலிவுட்டில் ரூஸோ பிரதர்ஸ் ஆகியோரின் இயக்கத்திலும் நடித்துள்ளார் தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், D50, சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாகவே காணப்படுகிறார்.

திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளாக பயணித்து வரும் தனுஷ், தற்போது ஒரு படத்துக்கு 25 முதல் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் மாதத்திற்கு சுமார் 3 முதல் 5 கோடி வரை வருமானம் ஈட்டும் தனுஷ், ஆண்டுக்கு 80 முதல் 100 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறாராம். அதேநேரம், போயஸ் கார்டனில் தனுஷ் கட்டியுள்ள புதிய வீட்டின் மதிப்பு 50 கோடிக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

 Dhanush Net Worth: Actor Dhanushs Salary, Net Worth and Cars details

இதுபோக சென்னையில் பல கோடி மதிப்பில் மேலும் இரண்டு பிளாட்டுகளை சொந்தமாக வைத்துள்ளாராம். அதேபோல், கார்களின் மீது அதிக ஆர்வம் உள்ள தனுஷ், 45 லட்சம் மதிப்புள்ள ஜாக்குவார், 75 லட்சம் மதிப்பில் ஃபோர்டு முஸ்டாங், 1.5 கோடி மதிப்பில் ஆடி கார் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறாராம். இந்த கார்களை விடவும் 3.5 கோடி மதிப்பில் பென்ட்லி கான்டினென்டல் ஜிடி கார், 8 கோடி ரூபாய் மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் ப்ரீமியம் பிளாக் கார் ஆகியவற்றையும் சொந்தமாக வைத்துள்ளார் தனுஷ்.

ஆகமொத்தம் தனுஷின் மொத்த சொத்து மதிப்பு 250 முதல் 300 கோடி வரை இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரையுலகில் கிங்காக இருக்கும் தனுஷ் சொந்த வாழ்க்கையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X