மெர்சலுக்கு பிறகு தனுஷுடன் களத்தில் குதித்த தயாரிப்பாளர்..!

தனுஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல தளங்களில் தடம் பதித்து வருகிறார் தனுஷ். தனுஷுக்கு அடுத்ததாக என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வடசென்னை திரைப்படங்கள் ரிலீசுக்கு வரிசைகட்டி நிற்கின்றன. இந்த நிலையில் அவர் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவியது.

Dhanush next direction!

இந்த தகவலை தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி இப்போது உறுதிபடுத்தியுள்ளார். மெர்சல் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தை தனுஷ் இயக்குகிறார்.

தற்போது டிடி 2 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இப்படத்தில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள அதித்தி ராவ் ஹைதரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன், எஸ்ஜே.சூர்யா ஸ்ரீகாந்த், சரத்குமார் என நட்சத்திரக் குவியல் உள்ளது. ஜோக்கர் படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் ஒரு பீரியட் ஃபிலிமாக தயாராக உள்ளது. தனுஷின் இயக்கத்தில் வெளியான பா பாண்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X