தனுஷுடன் இணையும் ராம்குமார்.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

சென்னை: முண்டாசுபட்டி, ராட்சசன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய ராம்குமார் தனது அடுத்த படத்தை நடிகர் தனுஷை வைத்து எடுக்க உள்ளார்.

தனுஷ் ரசிகர்கள் ஜகமே தந்திரம் படத்தை எதிர்பார்த்து காத்துள்ள நிலையில் ராம்குமார் இயக்கும் படத்தின் தலைப்பு இதுவாக தான் இருக்கும் என வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அடுத்த வருடம் இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் பிஸி

மிகவும் பிஸி

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் அடுத்து திரைக்கு வர உள்ளது. அதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதன் பிறகு ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் சன் பிக்ச்சர்ஸ் உடன் ஒரு படம். பின் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படம், பாலிவுட்டில் ஒரு திரைப்படம், வடசென்னை-2, புதுப்பேட்டை - 2 என பிஸியாக உள்ளார் தனுஷ்.

என்ன கதையா இருக்கும்

என்ன கதையா இருக்கும்

முண்டாசுபட்டி போன்று எதார்த்தமான ஒரு வெற்றி படத்தை தந்து பின்பு ராட்சசன் போன்ற மிரட்டலான கதைகளத்தை வைத்து ரசிகர்களை கவர்ந்த ராம்குமாரின் அடுத்த படத்தில் VFX முக்கிய பங்கு வகிக்கும் என சொல்லப்படுகிறது. அப்படியானால் அது அவருக்கு முற்றிலும் புதிதான ஒன்று அதை எவ்வாறு கையாள போகிறார் என்பதை காத்திருந்து பார்ப்போம்.

கொரோனாவால் சிக்கல்

கொரோனாவால் சிக்கல்

தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பின் படி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊராடங்கால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் இன்னும் சில நாட்களுக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Angadi Theru Untold Story | Rewind Raja Episode - 21 | Filmibeat Tamil
எதிர்பார்ப்பை கிளப்புகிறது

எதிர்பார்ப்பை கிளப்புகிறது

#D42 என்று பெயரிடப்படாமல் இருந்த இந்த படத்தின் தலைப்பு "வால் நட்சத்திரம்" என்று இணைய வாசிகளிடையே பேசப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X