மீண்டும் கிரைம் திரில்லருடன் மிரட்ட வருகிறார் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை: தனுஷின் 43வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று வெளியானது.
சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறியுள்ளார்.

இவர் நடித்து கடந்த வருடம் வெளியான அசுரன் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதனை அடுத்து தனுஷ் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். வரும் ஜூன் மாதம் அல்ல ஜூலை மாதம் இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதனை அடுத்து தற்போது பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இப்படத்தை அடுத்து ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். தற்போது இவரின் 43 வது படத்தின் அப்டேட் நேற்று வந்தது.
துருவங்கள் பதினாறு என்ற தனது முதல் படம் மூலம் தமிழ் சினிமாவை கலக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்குகிறார். இவர் நரகாசூரன் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவரது படமான மாப்பியா திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது இப்படத்தில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா ஆகியோர் நடித்து உள்ளனர்.
இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை அமைக்கிறார் இவர் இதற்கு முன் தனுஷ் உடன் மயக்கம் என்ன, பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் தனுஷ் உடன் இணையும் ஜந்தாவது திரைப்படம் ஆகும். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் தனது படங்கள் மூலம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துபவர். இவர் இளம் வயது இயக்குனர் கார்த்திக் நரேன் படத்தில் நடிப்பது பலரை ஆச்சரியமடைய செய்துள்ளது.
இப்படமும் ஒரு கிரைம் திரில்லர் ஆக இருக்கும் என்பது படத்தின் போஸ்டரை பார்க்கும் போது தெரிகிறது. இந்த அப்டேட்டை தனுஷ் ரசிகர்கள் நேற்று முழுவதும் டுவிட்டரில் டிரென்டு ஆக்கி கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











