Idly Kadai: இப்படி ஒரு மெலடியா? சுகமே சுகம்தான்.. தனுஷின் இட்லி கடை படத்தின் முதல் பாடல் !

சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள நான்காவது படம், இட்லி கடை. இந்த படத்துக்கு தனுஷே கதை எழுதியுள்ளார். படத்தை டான் பிக்சர்ஸ், வொண்டர்பார் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் மூவீஸ் என மூன்று தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இட்லி கடை படத்தை தனுஷ் எழுதி இயக்கியது மட்டும் இல்லாமல், நடித்தும் உள்ளார். தனது இயக்கத்தில் தானே இயக்கும் மூன்றாவது படம் இது. படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்கள் மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனி, ராஜ் கிரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே படத்தை ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதன் பின்னர் படத்தை அக்டோபர் ரிலீஸ்க்கு தள்ளி வைத்துள்ளனர்.

Dhanush Nithya Menen Idly Kadai Movie First Single Enna Sugam Song Recives Good Reviews
Photo Credit:

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் இன்று அதாவது ஜூலை 27ஆம் தேதி ரிலீஸ் செய்யப் பட்டுள்ளது. 'என்ன சுகம்' என்ற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பாடலை தனுஷ் எழுதியுள்ளார். மேலும் பாடலை ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடவும் செய்துள்ளார். நாளை அதாவது ஜூலை 28ஆம் தேதி தனுஷ் தனது 42வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் என்பதால் படக்குழு தரப்பில் இருந்து முதல் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

முதல் பாடல்: பாடல் செம மெலடியாக இருப்பதால் மிகவும் நன்றாக உள்ளது என ரசிகர்கள் ஜி.வி. பிரகாஷ் மற்றும் தனுஷை பாராட்டி வருகிறார்கள். என்ன சுகம் பாடல் மொத்தம் 3.48 நிமிடங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. லிரிக் வீடியோவாக ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தாலும், பாடலின் இடையில் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களும், படத்தில் இடம் பெறும் காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் தனுஷ் மற்றும் நித்யா மேனனுக்கு இடையிலான காட்சிகள், நித்யா மேனனுக்கு தனுஷ் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் வீடியோக்கள் என அனைத்தும் சிறப்பாக உள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Dhanush Nithya Menen Idly Kadai Movie First Single Enna Sugam Song Recives Good Reviews
Photo Credit:

தேசிய விருது கூட்டணி: இருவரும் கிராமத்து சாயலில் இருப்பதால் அவர்களது கெட்டப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக ரசிகர் ஒருவர், " எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த பாத்திரமாகவே மாறும் நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர் தனுஷ் " எனக் குறிப்பிட்டு தனுஷை பாராட்டியுள்ளார். ஏற்கனவே நித்யா மேனனும் தனுஷ் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்திற்காக நித்யா மேனன் தேசிய விருது வாங்கி இருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் அளவுக்கு திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். ரசிகர்கள் தனுஷ்க்கு இப்போதே பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X