Dhanush: மீண்டும் தனுஷுடன் இணையும் நித்யா மேனன்... D 50 படத்தில் காத்திருக்கும் இன்னொரு சர்ப்ரைஸ்!

சென்னை: தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், இந்தியில் Tere Ishk Mein படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளன. இதனைத் தொடர்ந்து தனது 50வது படத்தை தனுஷே இயக்கி நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனுஷின் D 50 படத்தில் நித்யா மேனனும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Dhanush: Nithya Menon Team-up again with Dhanush in D 50

தனுஷுடன் இணையும் நித்யா மேனன் : கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துவிட்ட தனுஷ், தற்போது D 50 ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் Tere Ishk Mein ஆகிய படங்கள் தனுஷின் லைன்-அப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இன்னொரு பக்கம் தனது 50வது படத்தை தானே இயக்கி வருகிறார் தனுஷ்.

அவர் இயக்கும் இரண்டாவது படமாக D 50 உருவாகி வருகிறது. தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஜூலை மாதமே இதன் ஷூட்டிங் தொடங்கியது. D 50 படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிப்பதோடு, எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

அதேபோல், இப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் D 50 படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், மேலும் சில அப்டேட்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் பெஸ்ட்டியாக நடித்து ரசிகர்களை ஏங்க வைத்தவர் நித்யா மேனன்.

 Dhanush: Nithya Menon Team-up again with Dhanush in D 50

தனுஷ் - நித்யா மேனனின் 'பெஸ்டி' காம்போவுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால், D 50 படத்திலும் தனக்கு ஜோடியாக நித்யா மேனனை புக் செய்துவிட்டாராம் தனுஷ். இதுபற்றிய அபிஸியல் அப்டேட், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட சென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வரும் D 50, ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தனுஷ் ஜோடியாக அமலா பால் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போது நித்யா மேனன் தான் தனுஷின் சாய்ஸ் என தெரியவந்துள்ளது. மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் D 50, அடுத்தாண்டு சம்மரில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கு முன்பாக கேப்டன் மில்லர் வெளியாகவிருப்பதால் தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X