அக்கா மகன் பட ஆடியோ லாஞ்சுக்கு வராத தனுஷ்.. இயக்குநரே அவர் தான்.. கோபமெல்லாம் இல்லை இதுதான் காரணம்!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவருடைய சகோதரியின் மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஆனால், படத்தின் இயக்குநரான நடிகர் தனுஷ் பங்கேற்காதது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் என இளைஞர்கள் பட்டாளத்தை வைத்து இளமைத் துள்ளலுடன் நடிகர் தனுஷ் இயக்கியுள்ள படம் தான் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இந்த படத்தில் ஸ்பெஷல் கேமியோவாக பிரியங்கா மோகன் 'கோல்டன் ஸ்பேரோ' பாடலுக்கு மடிசார் கட்டிய மாமியாக வந்து நடனமாடியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வெளியான அத்தனை பாடல்களும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்துக்கும் தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்கும் தான் அடுத்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் போட்டியே நடக்கப் போகிறது. இந்நிலையில், தனுஷ் ஏன் ஆடியோ லாஞ்சுக்கு வரவில்லை என்பதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆடியோ லாஞ்ச்: தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் நாயகன் ஜி.வி. பிரகாஷ் கலந்துக் கொண்டார். மேலும், சிறப்பு விருந்தினர்களாக லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், அருண் விஜய், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தனுஷுக்கு என்ன கோபம்?: படத்தின் இயக்குநரான தனுஷ் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மீது தனுஷுக்கு என்ன கோபம் என அங்கே வந்தவர்களே கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு வொண்டர்பார்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரேயாஸ் சரியான பதிலை அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இட்லி கடை தான் காரணம்: அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' படத்துக்கு போட்டியாக இட்லி கடை படம் வராது என்றும் ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப்போகும் என சில ரூமர்களை கிளப்பி வரும் நிலையில், இட்லி கடை படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருப்பதால் தான் இங்கே வரமுடியவில்லை. ஏப்ரல் 10ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் ரொம்பவே கடுமையாக தனுஷ் உழைத்து வருகிறார் என ஸ்ரேயாஸ் பதில் அளித்துள்ளார்.
குட் பேட் அக்லியுடன் போட்டி கன்ஃபார்ம்: விடாமுயற்சி திரைப்படத்துடன் எந்தவொரு பெரிய படமும் போட்டியாக வெளியாகவில்லை. சோலோ ரிலீஸ் ஆகியே அந்த படம் பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. இந்நிலையில், தனுஷின் இட்லி கடை படத்துடன் குட் பேட் அக்லி படம் வெளியானால் அந்த படத்தின் வசூலும் பாதிக்கும் என தனுஷ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழ் புத்தாண்டை டார்கெட் செய்து இரண்டு படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் நன்றாக வந்திருப்பதாக எஸ்.ஜே. சூர்யா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் படத்தை பாராட்டி பேசியுள்ளனர். காதலர் தினத்துக்கு வரவேண்டிய அந்த படம் விடாமுயற்சி ரிலீஸ் காரணமாக பிப்ரவரி 21ம் தேதி தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











