கண்டிப்பா வர்றேன்னு சொல்லுங்க.. ஏப்ரல் 9ம் தேதி.. திட்டமிட்டபடி.. கர்ணன் ரிலீஸ்!
சென்னை : நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படம் 9ந் தேதி ரிலீஸாகும் என பதிவிட்டுள்ளார்.
மேலும் கர்ணன் படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதனால் கர்ணன் திட்டமிட்டபமி 9ந் தேதி ரிலீஸாகும் என்பது உறுதியாகி உள்ளது.

முன்னணி நடிகர்கள்
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும்,இதில் யோகி பாபு, லாரி, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

4 பாடல்களும் ஹிட்
இப்படத்தின் பாடல்களும் டீசர்களும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. மேலும், இப்படத்தில் பண்டாரத்தி என்ற பாடலால் இப்படம் சர்ச்சையில் சிக்கி இறுதியில் மஞ்சனத்தி என்று மாற்றி அமைக்கபட்டது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்டாவரச்சொல்லுங்கு, மஞ்சனத்தி, திரௌபதி முத்தம், உட்றாதீங்க எப்போ என்ற அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றுள்ளன.

நேரடியாக தியேட்டரில்
கர்ணன் படத்தில் ட்ரைலரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்த நிலையில், ட்ரைலர் வெளியானால் ஏதேனும் புதிதாக பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ என்று எண்ணிய படக்குழுவினர் நேரடியாக படத்தை வெளியிட முடிவு செய்தனர். ட்ரைலரை எதிர்பார்த்து காத்திருந்த தனுஷ் ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

கர்ணன் 9ந் தேதி ரிலீஸ்
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திட்டமிட்டபடி படம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 9ந் தேதி கர்ணன் ரிலீஸாகும் என பதிவிட்டுள்ளார். மேலும், அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதில் இருந்து திட்டமிட்டபடி ஏப்ரல் 9ந் தேதி கர்ணன் வெளியாவது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











