Dhanush - இரண்டு மகன்கள் இருந்தாலும் வருத்தம்தான்.. ஓபனாக பேசிய தனுஷ்
சென்னை: Dhanush (தனுஷ்) நடிகர் தனுஷ் தனது மகன்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். கோலிவுட்டில் அறிமுகமாகும்போது பலரிடம் உருவ கேலியை சந்தித்தவர் இப்போது கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என உயர்ந்து நிற்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வாத்தி படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பில்: வாத்தி படத்தின் தோல்வி காரணமாக கேப்டன் மில்லர் படம் நிச்சயம் ஹிட்டாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் தனுஷும், அவரது ரசிகர்களும். சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் இயக்கம் என்பதால் நிச்சயம் படம் பெரிய அளவில் பேசப்படும் என்ற நம்பிக்கையும் ஒருபக்கம் இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
தனுஷ் 50: தனுஷ் அடுத்ததாக தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், மடோனா செபாஸ்டியன், காளிதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கான செட் போடும் பணிகள் மும்முரமாக நடந்துவருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
திருமண முறிவு: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்னர் பிரிவில் முடிந்தது. இருப்பினும் இரண்டு பேரும் இன்னமும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. எனவே இருவரும் விரைவில் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
தனுஷ் பேட்டி: இந்நிலையில் தனுஷ் அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய தனுஷ், எனக்கு இரண்டு மகன்கள் இருந்தாலும் மகள் இல்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இரண்டு மகன்களையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்தான். இருந்தாலும் ஒரு பெண் பிள்ளை இருந்தால்தான் அந்த வீடு முழுமையடையும்.
அவள்தான் என் மகள்: அப்படி எனது மகளாக பார்ப்பது செல்வராகவனின் மகள் லீலாவதியைத்தான். அவருக்கு தாய், தந்தை, தாத்தா, பாட்டிக்கு பிறகு இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்தது சித்தப்பாவைத்தான் (தனுஷ்). நான் என்ன செய்தாலும் அவருக்கு பிடிக்கும். என்னுடைய பாடலை பார்க்காமல் சாப்பிடமாட்டார், தூங்கமாட்டார். அந்த அளவு அவருக்கு என் மீது பாசம். இந்த உலகத்திலேயே என்னுடைய மிக தீவிர ரசிகர்களில் லீலாவதிதான் ஃபர்ஸ்ட்" என்றார். அவரது இந்தப் பேட்டியை ரசிகர்கள் திடீரென ட்ரெண்டாக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











