Vijay: விஜய்க்கு நெருக்கமானவரின் கடை.. திறந்து வைத்து வாழ்த்து சொன்ன தனுஷ்.. இது புதுசா இருக்கே!

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களின் படங்கள் வரும்போது, நடிகர்களின் கதாபாத்திரங்களைப் பார்த்து, அந்த கதாபாத்திரங்களின் சிகை அலங்காரம், அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் என நடிகர்களைப் போல் தங்களது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளும் தீவிரமான ரசிகர்கள் பலர் உள்ளனர். இப்படியான நிலையில் நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ் சக்திவேல், சென்னை ஆர்.ஏ. புரத்தில் புதிய சலூன் கடை ஒன்றை கட்டியுள்ளார். அந்த கடையைத் திறந்து வைத்து, அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

நடிகர் விஜய்க்கு கடந்த சில ஆண்டுகளாகவே ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இருப்பவர் தேவ் சக்திவேல். இவர் சினிமாக்களில் நடிகர்களுக்கு ஹேர் ஸ்டைல் டிசைன் செய்வது மட்டும் இல்லாமல், செலிபிரிட்டிகளுக்கு என தனியாக சலூனும் வைத்து நடத்தி வருகிறார். இவரிடத்தில் ஹேர் ஸ்டைலுக்கு என, முறையாக பயிற்சி பெற்ற கலைஞர்கள் இருப்பதால், பெரும்பாலான நடிகர்களும் நடிகைகளும் அவரது சலூன் கடையில் சிகை அலங்காரம் செய்து கொள்கிறார்கள்.

இதில் பலர் தங்களது படங்களுக்காக அவரை கமிட் செய்கிறார்கள். அப்போது அவரது வேலை பிடித்துப் போன பின்னர், அவரையே தங்களது ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாற்றி விடுகிறார்கள். அப்படி இவரை தனது ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாற்றிக் கொண்டவர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். விஜய்க்கு இவர் கடந்த சில ஆண்டுகளாகவே ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக செயல்பட்டு வருகிறார். விஜய் படங்கள் தொடங்கி, விஜய்யின் மற்ற நேரங்களிலும் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தேவ் சக்திவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Dhanush Opens Vijay s Hairstylist D Cuts Dev Sakthivel New Salon Shop

தோனி: அதே நேரத்தில் தேவ் சக்திவேல் நடிகர் தனுஷ்க்கும் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக பல ஆண்டுகளாக உள்ளார். தனது சலூனுக்கு D Cutz by Dev என பெயர் வைக்க காரணங்களில் தனது பெயர் இருந்தாலும், அதற்கு மற்ற காரணங்களாக தனுஷ் மற்றும் தோனி உள்ளார்கள் என அவரே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு தேவ் சக்திவேல் தான் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இருந்துள்ளார்.

அஜித் குமார்: அதேபோல்தான் விஜய்க்கும். லியோ படத்தில் விஜய்யை இரண்டு விதமான மாஸ் லுக்கில் காட்டியதற்கு தேவ் சக்திவேலும் ஒரு காரணம். அதேபோல் தனுஷுன் அசுரன் படத்தில் இரண்டு விதமாக காட்டியதற்கும் இவரது வேலைப்பாடு உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியானது. இந்த படத்தில் அஜித்திற்கு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றியவர் தேவ் சக்திவேல். இது மட்டும் இல்லாமல், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், கவின், அனிருத் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் அவரது வாடிக்கையாளர்களாக உள்ளார்கள்.

Dhanush Opens Vijay s Hairstylist D Cuts Dev Sakthivel New Salon Shop

தனுஷ்: இப்படியான நிலையில் சென்னையில் உள்ள ஆர்.ஏ. புரத்தில் தேவ் சக்திவேல் தொடங்கியுள்ள புதிய சலூன் கடையை நடிகர் தனுஷ் திறந்து வைத்து வாழ்த்தும் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தேவ் சக்திவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வேகமாக பரவி வருவதால் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X