»   »  சென்னையில் ஓபனிங் கிங் 'கொடி' தனுஷா, 'காஷ்மோரா' கார்த்தியா?

சென்னையில் ஓபனிங் கிங் 'கொடி' தனுஷா, 'காஷ்மோரா' கார்த்தியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடி மற்றும் காஷ்மோரா படங்கள் வெளியான அன்று சென்னையில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா நடித்த கொடி படம் தீபாவளிக்கு முந்தைய நாள் வெளியானது. தனுஷ் அரசியலை கையில் எடுத்துள்ள படம்.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா நடித்துள்ள காஷ்மோராவும் தீபாவளிக்கு ஒரு நாள் முன்பே வெளியானது.

கொடி

கொடி

கொடி படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் மட்டும் 23 தியேட்டர் வளாகங்களில் 350 காட்சிகள் வெளியிடப்பட்டது. படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 1 கோடியே 44 லட்சத்து 15 ஆயிரத்து 880 வசூலித்துள்ளது.

காஷ்மோரா

காஷ்மோரா

கார்த்தியின் காஷ்மோரா சென்னையில் 17 தியேட்டர் வளாகங்களில் 302 காட்சிகள் திரையிடப்பட்டது. அதன் மூலம் முதல் நாள் மட்டும் ரூ. 1 கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 420 வசூல் செய்துள்ளது.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

வெள்ளிக்கிழமை அன்று கொடி, காஷ்மோரா ஆகிய படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் 95 சதவீத இருக்கைகள் நிரம்பியிருந்தன. அதனால் தான் இந்த வசூல் சாத்தியமாகியுள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஒரு வெற்றி கிடைக்காதா என எதிர்பார்த்த தனுஷுக்கு கொடி ஹிட்டாகியுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது. காஷ்மோராவுக்காக கார்த்தி கஷ்டப்பட்டு கெட்டப்பை மாற்றி நடித்தது வீண் போகவில்லை.

English summary
Dhanush's kodi and Karthi's Kashmora have got a good run in Chennai box office on the day of release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil