பாவம் வரலட்சுமி, சாய் பல்லவி: தனுஷுடன் நடிச்சா இது தான் பிரச்சனை #SundayThoughts
Recommended Video

சென்னை: மாரி 2 படத்தில் வரலட்சுமியின் ராசி சுத்தமாக வேலை செய்யவில்லை.
சண்டக்கோழி 2 மற்றும் சர்கார் ஆகிய படங்களை பார்த்தவர்கள் ஹீரோவுக்கு அடுத்தபடியாக வில்லியாக நடித்த வரலட்சுமி சரத்குமார் பற்றி தான் பேசினார்கள். வரலட்சுமி தனது அருமையான நடிப்பால் கீர்த்தியை ஓரங்கட்டினார்.
மாரி 2 படத்திலும் அதே போன்று செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

சாய் பல்லவி
நடிப்பில் வரலட்சுமிக்கு சற்றும் சளைத்தவர் இல்லை சாய் பல்லவி. ஆனால் மாரி 2 படத்தில் வரலட்சுமி சாய் பல்லவியை ஓவர் டேக் செய்யவில்லை. மாறாக ஹீரோ தனுஷ் வரலட்சுமி மற்றும் சாய் பல்லவி ஆகியோரை தனது நடிப்பால் ஓவர்டேக் செய்துவிட்டார்.

தனுஷ்
மாரி 2 படத்தை பார்த்தவர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பு பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தனுஷுடன் நடித்தால் இது தான் பிரச்சனை. அவர் அசால்டா நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துவிடுவார். நடிப்பு மன்னன் ஆச்சே!

மீம்ஸ்
மாரி 2 பார்த்துவிட்டு நெட்டிசன்கள் சாய் பல்லவியை கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள். நடிப்புத் திறமைக்காக கொண்டாடப்பட்ட சாய் பல்லவி தற்போது அதே காரணத்திற்காக கலாய்க்கப்படுகிறார்.

ரவுடி பேபி
ரவுடி பேபி என்று கூறி சாய் பல்லவியின் புகைப்படம் வெளியானபோதே இவர் கதாபாத்திரம் காமெடி பீஸாக இருக்குமோ என்று ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. படத்தை பார்த்த பிறகு அவரை கலாய்க்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். பாவம், சாய் பல்லவி.


Click it and Unblock the Notifications











