மனசே உடைஞ்சு போச்சு... நிதீஷ் வீரா மறைவுக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் தனுஷ்

சென்னை : அசுரன் படத்தில் நடிகர் தனுஷுடன் நடித்துள்ள நிதீஷ் வீரா இன்றைய தினம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

Recommended Video

Asuran Pudhupettai நடிகர் Nitish Veera கொரோனாவால் உயிரிழப்பு | #RIPNitishVeera

கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்றைய தினம் உயிரிந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அசுரன், காலா படங்கள்

அசுரன், காலா படங்கள்

கடந்த 2006ல் தனுஷ்டன் இணைந்து புதுப்பேட்டை படத்தில் அறிமுகமானார் நிதீஷ் வீரா. தொடர்ந்து வெண்ணிலா கபடிக்குழு, சிந்தனை செய், பேரன்பு, ராட்சசி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுடனும் காலா படத்தில் ரஜினியுடனும் நடித்துள்ளார்.

நடிகர்கள் அஞ்சலி

நடிகர்கள் அஞ்சலி

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள் விஷ்ணு விஷால், செல்வராகவன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

இதனிடையே, அசுரன் படத்தில் இணைந்து நடித்துள்ள தனுஷும் தனது உருக்கமான அஞ்சலியை செலுத்தியுள்ளார். மேலும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது தி க்ரே மேன் படப்பிடிப்பிற்காக லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

நீதிஷை இழந்து வாடும் குடும்பத்தினர்

நீதிஷை இழந்து வாடும் குடும்பத்தினர்

நிதீஷிற்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு வயது 45. தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஷ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் லாபம் படத்தில் நடித்து வருகிறார். மறைந்த எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X