தனுஷ் என்னை செல்லமா இப்படித்தான் கூப்பிடுவாரு… நெகிழ்ந்த மாளவிகா மோகனன்!
சென்னை : நடிகை மாளவிகா மோகன் தனுஷூடன் D43 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video
இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
கார்த்திக் நரேன் இயக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

ரஜினியுடன்
நடிகை மாளவிகா மோகனன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மால்மோனு கூப்டுவாரு
இந்நிலையில், விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டர் ஸ்பேஸ் கலந்து கொண்ட மாளவிகா மோகனன், D43 திரைப்படம் குறித்து பேசிய அவர் , தனுஷ் என்னை மால்மோ என்றுத்தான் செல்லமாக அழைப்பார் என்று கூறினார்,ஆனால், என் நெருங்கிய நண்பர்கள் என்னை மாலு என்று அழைப்பார்கள் என்று பேசினார்.

ஏராளமான ரசிகர்கள்
மலையான நடிகையான மாளவிகா மோகனன் தமிழ் நடித்தது என்னமோ ஒரு சில படங்கள் தான் என்றாலும் தன்னுடைய அழகால் ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளார். இணையத்தில் இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்டுகளும் வந்து குவிகின்றன.

விரைவில் படப்பிடிப்பு
தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் D43 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை சீராகி வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











