Dhanush - நஸ்ரியா வேண்டாம் நயன்தாராட்ட போ.. நையாண்டி பிரச்னையால் ப்ளான் போட்டு வாய்ப்பை பறித்தாரா தனுஷ்?
சென்னை: Dhanush (தனுஷ்) நஸ்ரியாவுக்கு செல்ல வேண்டிய வாய்ப்பை ப்ளான் போட்டு நயன் தாராவுக்கு பெற்றுக்கொடுத்தாரா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். நையாண்டி படத்தின்போது ஏற்பட்ட பிரச்னைதான் இதற்கு காரணம் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.
போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்தப் படத்தில் இயக்குநராக ஒப்பந்தம் ஆகும்போது அவருக்கு வயது 22 என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகவில்லையென்றாலும் விமர்சன ரீதியாக கவனம் ஈர்த்தது. ஆனால் துப்பாக்கி படத்துடன் போடா போடி ரிலீஸ் ஆனதால் ரசிகர்களின் கவனம் போடா போடி பக்கம் போகவில்லை.

மூன்று வருட இடைவெளி: முதல் படம் தோல்வியடைந்தால் ஒரு இயக்குநருக்கு என்ன நடக்குமோ அதுவே விக்னேஷ் சிவனுக்கு நடந்தது. 2007ஆம் ஆண்டு ஒப்பந்தமாகி 2009ஆம் ஆண்டு ஷூட்டிங் சென்று 2012ஆம் ஆண்டுதான் போடா போடி ரிலீஸானது. அந்தப் படம் தோல்வி அடைந்ததன் காரணமாக அடுத்த மூன்று வருடங்களுக்கு அவருக்கு தயாரிப்பாளர் யாரும் கிடைக்கவில்லை. இந்த இடைபட்ட காலத்தில் நானும் ரௌடிதான் படத்தின் கதையை எழுதியிருந்தார் அவர்.
சென்சேஷ்னல் நானும் ரௌடிதான்: பத்து ஹீரோக்களிடம் கதை சொன்னாலும் யாரும் நானும் ரௌடிதான் படத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை. ஒருவழியாக விஜய் சேதுபதி கருணை கோட்டாவில் கரம் நீட்ட நானும் ரௌடிதான் படம் முதல் அடியை எடுத்து வைத்தது. அதனையடுத்து தனுஷ் அந்தப் படத்தை தயாரிக்க ஒத்துக்கொண்டார். படத்தில் நயன்தாராவும் நடித்திருந்தார். 2015ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

நஸ்ரியாதான் முதல் சாய்ஸ்: நானும் ரௌடிதான் படத்தின் கதையை கௌதம் கார்த்திக்கிடம் முதலில் சொல்லியிருந்தாராம். அவரும் முதலில் ஒத்துக்கொண்டு பிறகு ஏதோ காரணத்தால் விலகிவிட்டார். அதேபோல் படத்தின் ஹீரோயினாக நடிக்க நஸ்ரியாதான் விக்னேஷ் சிவனின் முதல் சாய்ஸாக இருந்தாராம். ஆனால் கதையை கேட்ட தனுஷ் நயன்தாராட்ட கதை சொல்றியா என கேட்டு அவரிடம் விக்னேஷ் சிவனை அனுப்பி வைத்தாராம்.
நையாண்டி பிரச்னைதான் காரணமா?: தற்போது இந்தத் தகவல் புதிய பிரச்னையை கிளப்பியிருக்கிறது. அதாவது, நையாண்டி படத்தில் நடித்தபோது படக்குழுவுக்கும், நஸ்ரியாவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதாவது, தான் இல்லாமலேயே தன்னை வைத்து கவர்ச்சி காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள் என நஸ்ரியா பரபரப்பான பேட்டியை கொடுத்திருந்தார். அது அப்போது பெரும் விவாதமானது. மேலும் தனுஷுக்கு அது ப்ளாக் மார்க்காகவே கருதப்பட்டது.
சூழல் இப்படி இருக்க நஸ்ரியா அவ்வாறு செய்ததால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தார் தனுஷ். அதனால்தான் நானும் ரௌடிதான் படத்தில் முதல் சாய்ஸாக விக்னேஷ் சிவனுக்கு நஸ்ரியா இருந்ததை அறிந்துகொண்ட அவர், அதனை பறிக்கும் விதமாக நயன் தாராவை உள்ளே கொண்டு வந்திருக்கிறார் என ரசிகர்களில் சிலர் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

அதெல்லாம் இல்லைங்க நல்ல எண்ணம்தான்: அதேசமயம் அப்படி கூறுபவர்களுக்கு தனுஷ் ரசிகர்கள் தக்க பதிலடியையும் கொடுத்துவருகின்றனர். அன்றைய காலகட்டத்தில் நஸ்ரியாவைவிட நயன்தாராதான் டாப்பில் இருந்தார். எனவே அப்படிப்பட்ட ஸ்டார் வேல்யூ கொண்ட நடிகையை நடிக்க வைத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து விக்னேஷ் சிவனுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நயனிடம் விக்கியை தனுஷ் அனுப்பினாரே தவிர நஸ்ரியா மீது இருக்கும் கோபத்தில் கிடையாது என அவர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











