என்னது நித்யா மேனன் ரோல்ல நயன்தாராவா.. அவங்க அதுக்கு செட்டாக மாட்டாங்க என ரசிகர்கள் கமெண்ட்!

சென்னை : நடிகர் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா நடிப்பில் கடந்த 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது திருச்சிற்றம்பலம் படம்.

Recommended Video

Thiruchitrambalam Public Review | Thiruchitrambalam Review | Thiruchitrambalam | Dhanush | *Review

தொடர்ந்து தனுஷின் அடுத்தடுத்த 4 படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் 5 நாட்களிலேயே 50 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். சொந்த வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். ஆனாலும் ஐஸ்வர்யா ரஜினியுடனான இந்த விவாகரத்து முடிவால் இவரது கேரியர் பாதிக்காத வகையில் கவனமாக செயல்பட்டு வருகிறார்.

கேரியரில் சிறப்பான கவனம்

கேரியரில் சிறப்பான கவனம்

தன்னுடைய குழந்தைகள், கேரியர் என அடுத்தடுத்து கவனம் செலுத்திவரும் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது திருச்சிற்றம்பலம் படம். தனுஷின் பலமே அவர் பாய் நெக்ஸ்ட் டோர் என்ற வகையில் இயல்பாக நடிப்பதுதான் என்பதை மீண்டும் திருச்சிற்றம்பலம் படம் நிரூபித்துள்ளது.

5 நாட்களில் மிரட்டல் வசூல்

5 நாட்களில் மிரட்டல் வசூல்

கடந்த 5 நாட்களில் இந்தப் படம் சர்வதேச அளவில் 50 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. முன்னதாக தனுஷின் ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் மற்றும் தி க்ரே மேன் ஆகிய படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகின.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

அந்த வகையில் தனுஷின் படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்துள்ளது. மேலும் படத்தை ரசிகர்கள் விரும்பும் வகையில் சிறப்பாக கொடுத்துள்ளார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். இந்தப் படத்தில் தனுஷின் தோழியாக ஷோபனா என்ற கேரக்டரில் மிரட்டியுள்ளார் நித்யா மேனன்.

தனுஷுடன் 3 நாயகிகள்

தனுஷுடன் 3 நாயகிகள்

இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து 3 நாயகிகள் நடித்துள்ளனர். நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர் மற்றும் ராஷி கண்ணா என மூன்று நாயகிகள் படத்தில் இணைந்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அனிருத் இசையில் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

தனுஷ் தயாரிக்க திட்டம்

தனுஷ் தயாரிக்க திட்டம்

ஆனால் இந்தப் படத்தை தனுஷ் தனது வொன்டர்பார் நிறுவனத்திற்காக தயாரிக்க இருந்ததாகவும் படத்தில் நித்யா மேனன் கேரக்டரில் நயன்தாரா, ராஷி கண்ணா நடிப்பில் ஹன்சிகா மற்றும் பிரியா பவானி ஷங்கர் கேரக்டரில் சமந்தாவை நடிக்க வைக்க திட்டமிட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நித்யா மேனன் கேரக்டரில் நயன்தாரா?

நித்யா மேனன் கேரக்டரில் நயன்தாரா?

திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி தற்போது சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷிற்கு ஈடுகொடுத்து நடிப்பு ராட்சசி நித்யா மேனன் படத்தில் மிரட்டியுள்ளார். தன்னுடைய நடிப்பால் ஷோபனா கேரக்டரை சிறப்பாக்கியுள்ளார். இந்நிலையில், இந்தக் கேரக்டரில் நயன்தாரா செட் ஆகியிருக்க மாட்டார் என்று ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X