கதாநாயகனாகும் சூப்பர் ஸ்டார் பேரன்.. இயக்கப்போகும் தனுஷ்... ரஜினி என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: நடிகர் தனுஷின் முதல் மகன் யாத்ரா. இவரை கதாநாயகனாக்கும் முயற்சியில் நடிகர் தனுஷ் களமிறங்கி உள்ளார். இதற்காக, நடிகர் தனுஷே கதை திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி, படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னர், திருப்பதி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தம்பதிகளாக இருந்து பிரிந்தவர்கள் என்பது ஊர் அறிந்த விஷயம். இருவரும் விவாகரத்து பெறப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி, அதன் பின்னர் இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர், ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள் பலரும், இவர்கள் இருவரும் இப்படி முடிவு எடுத்துள்ளார்களே அந்த மனுஷனைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவில்லையே என்று விமர்சித்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே இருவரையும் இணைந்து வாழுங்கள் என்று சொல்லி, இருவரையும் சேர்த்து வைக்க மிகவும் முயற்சிகள் எடுத்தார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இருவரும் விவாகரத்து பெற்று விட்டார்கள். அப்படி இருந்தாலும் தங்களது மகன்களுக்காக இருவரும் மிகுந்த அக்கறையாக இருக்கிறார்கள்.

Dhanush Plans To Introduce His Son Yathra As Hero Under His Direction And Production

இப்படி இருக்கையில் நடிகர் தனுஷ் தனது மகன் யாத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறார். அதுவும் தனது மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்யும் படத்தை தானே கதை, திரைக்கதை அமைத்து தானே இயக்கவும் உள்ளதாகவும் அந்த படத்தை அவரது வொண்டர் பார் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார்: இப்படி இருக்கையில் தான் சினிமாவில் நடிப்பது தொடர்பாக தனது தாத்தா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரிடம் கூறுகையில் இருவரும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத்தான் சொன்னார்களாம். அதாவது உனது அப்பா உனக்கு எது செய்தாலும் அது உனது நல்லதுக்கும் வளர்ச்சிக்கும் தான் இருக்கும் எனவே, நீ அப்பா சொல்வதை கேட்டு நடந்து கொண்டால் போதும்" என்று தெரிவித்து வாழ்த்தினார்களாம். யாத்ராவும் சூப்பர் ஸ்டார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, அதன் பின்னர்தான் திருப்பதிக்கு தரிசனத்திற்கு சென்றாராம்.

எதிர்பார்ப்பு: தகவல்கள் இப்படியாக கோலிவுட்டில் வலம் வர, படத்தின் பூஜைக்கோ, படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்வார்களா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X