Dhanush: மரியாதை தெரிந்த தனுஷ்.. பொறுப்பில்லாத சில தனுஷ் ரசிகர்கள்.. இட்லி கடையில் ஏற்பட்ட குளறுபடி!

சென்னை: தனுஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள நான்காவது படம் இட்லி கடை. இந்தப் படத்தில் இயக்குநராக மட்டும் இல்லாமல், நடிகராகவும் தனுஷ் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள 51 வது படம் இட்லி கடை. இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படக்குழு வேறு ஒரு பிளானில் உள்ளது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராயன். இது இவரது 50வது படம். இந்த படத்தை அவரே இயக்கவும் செய்தார். இப்படி இருக்கும்போது, இவரது இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்கள் என்பதால் படத்துக்கு விளம்பரம் போதுமான அளவில் இல்லை என கூறப்படுகிறது.

Dhanush Idly Kadai Ajith Kumar Good Bad Ugly

தனுஷ் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படங்கள் என்றால் அது இட்லி கடை மற்றும் குபேரா படங்கள்தான். இதில் முதலில் குபேரா படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இப்போது ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இட்லி கடை படத்தை படக்குழு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்தது. ஆனால் ஏற்கனவே அந்த தேதியில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது இரண்டு படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் என அறிவிப்பு உறுதியானது.

இட்லி கடை: இதனால் தனுஷ் ரசிகர்கள் அஜித்தை மிகவும் மோசமாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தார்கள். அதிலும் குறிப்பாக அவரது கடைசி படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறவில்லை. அப்படி இருக்கும்போது, தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் அஜித்தின் சினிமா சாம்ராஜ்யம் முடிவுக்கு வருகிறது என்றெல்லாம் மோசமாக பதிவிட்டு வந்தார்கள். இது அஜித் ரசிகர்களை கோபமாக்கியது.

Dhanush Idly Kadai Ajith Kumar Good Bad Ugly

குட் பேட் அக்லி: இன்று குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகவுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாகவே குட் பேட் அக்லி என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் பக்கத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. டீசர் இன்று வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனால், தனுஷ் தரப்பில் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க முடிவு செய்துள்ளார்கள் என கூறப்படுகிறது. மேலும் குட் பேட் அக்லி படத்துடன், தனது படத்தை ரிலீஸ் செய்வது என்பது, சீனியருக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்காது. எனவே படத்தை வேறு தேதியில் ரிலீஸ் செய்ய தனுஷ் முடிவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

Dhanush Idly Kadai Ajith Kumar Good Bad Ugly

தனுஷ்: இது தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் விபரத்தை கேள்விப்பட்டவர்கள், தனுஷ் மரியாதை தெரிந்த நபராக உள்ளார். ஆனால், அவரது ரசிகர்களில் ஒரு சிலர் மிகவும் பொறுப்பில்லாதவர்களாக சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருகிறார்கள் என விமர்சித்து வருகிறார்கள். இட்லி கடை ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.

Dhanush Idly Kadai Ajith Kumar Good Bad Ugly

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X