திரையில் பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறேன்.. இது தலைவர் திருவிழா.. அண்ணாத்த டிரைலரை புகழ்ந்த தனுஷ் !
சென்னை : அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நடிகர் தனுஷ், படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
ரஜினியின் அண்ணாமலை, முத்து, படையப்பா பட வரிசையில் அண்ணாத்த படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.
அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ந் தேதி தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது.

அண்ணாத்த
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

பாடல்கள் ஹிட்
அண்ணாத்த அண்ணாத்த பாடல் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது. மறைந்த இசை வித்தகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதால் இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதையடுத்து டூயட் பாடலான சாரல் காற்றே வெளியானது. அடுத்ததாக மருதாணி, வா சாமி ஆகிய பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

குடும்ப பின்னணி
வீரம், விஸ்வாசம் திரைப்படங்களைப் போன்று குடும்ப உறவுகளைக் கொண்டாடும் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. இதில், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடித்துள்ளார். குஷ்பு மற்றும் மீனா இருவரும் முறை பெண்ணாக நடித்துள்ளனர்.

கல்கத்தாவிற்கே காப்பு கட்டிட்டேன்
இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இதில் நீ யாரு என்பது நீ சேர்த்து வைக்கும் சொத்துலையோ, சுத்தி இருக்குறவங்க உன் மேல வச்சி இருக்கும் பயத்திலையோ இல்லை... நீ செய்யும் செயலிலும், பேச்சிலும் இருக்கு, இது வேதவாக்கு என்று பட்டையை கிளப்பும்பும் வகையில் ஒரு வசனமும், ரஜினிக்கே உரிய ஸ்டைலில் கல்கத்தாவிற்கே காப்பு கட்டிட்டேன் என்று பேசும் வசனமும் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.

இது தலைவர் திருவிழா
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாத்த, வின்டேஜ் ரஜினிசம், முத்து, அருணாசலம், படையப்பா படங்களின் அதிர்வுகளை பார்க்க முடிகிறது. திரையில் பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறேன். 'இது தலைவர் திருவிழா' என்று பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











