சிவகார்த்திகேயனின் பராசக்தி ஓடுது.. தனுஷ் எதை பாராட்டிருக்காரு பாருங்க.. மீண்டும் கிளம்பிய பஞ்சாயத்து

சென்னை: சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகம் செய்தது பாண்டிராஜ். ஆனால் அவரை சினிமாவுக்குள் அழைத்து வர வேண்டும் என முதலில் நினைத்தது தனுஷ்தான் என சொல்லப்படுகிறது. தன்னுடைய 3 படத்தில் காமெடி கேரக்டரை கொடுத்திருந்தார். பிறகு தொடர்ந்து வரிசையாக ஹீரோவாக நடித்துவரும் எஸ்கே; இப்போது பராசக்தி படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையே தனுஷுக்கும், சிவாவுக்கும் பிரச்னை முட்டிக்கொண்டிருப்பதாக ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வெற்றி பெற்று; அதே சேனலில் தொகுப்பாளர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தவர் சிவகார்த்திகேயன். ஒரு படத்துக்கு ஆங்கரிங் செய்த அவரை ஹீரோவாக அறிமுகமாக்க பாண்டிராஜ் முடிவு செய்தார். தனுஷ் தனது 3 படத்தில் முக்கியமான ரோலை கொடுத்திருந்தார். எஸ்கேவுக்குள் இருக்கும் திறமையை பார்த்து வெற்றிமாறனிடம் சொல்லி அவரது உதவி இயக்குநர்களை கதை செய்ய சொல்லி படத்தையும் தயாரித்தார்.

அசுர வளர்ச்சி: அப்படி அவர் நடித்த எதிர்நீச்சல் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அதிலும் அமரன் படத்தின் வெற்றியெல்லாம் விண்ணளவு இருந்தது. இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்திருக்கிறார் சிவா. கடந்த பத்தாம் தேதி படமானது வெளியாகி ரசிகர்களிடையே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றுவருகின்றன. வசூலிலும் பெரிய குறையெல்லாம் ஒன்றும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush Praises Eko Skips Parasakthi Fans Question His Equation With Sivakarthikeyan
Photo Credit:

பலரும் பாராட்டு: பராசக்தியை ரசிகர்கள் பலரும் பாராட்டிவருகிறார்கள். அமரன் படம் மாதிரியே இப்படமும் எஸ்கேவின் கரியரில் ஒரு மைல் கல் என்பது அவர்களது கருத்து. பெரும்பாலானவர்கள் படத்தை பாராட்டினாலும் ஒருதரப்பினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தவும் தவறவில்லை. உணர்வுப்பூர்வமான கதையில் காதல் காட்சிகள் எல்லாம் படு அறுவையாக இருக்கிறது என ஓபனாகவே அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும் படம் ஹிட்தான்.

பாராட்டிய தனுஷ்: இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் எகோ படத்தை பார்த்து பாராட்டியிருக்கிறார். அந்தப் படம் குறித்து அவர், "மலையாள படமான எகோ ஒரு மாஸ்டர் பீஸ். நடிகை பியானோ மோமின் அனைத்து பெருமைகளுக்கும் தகுதியானவர். உலக தரத்திலான நடிப்பை வழங்கியிருக்கிறார்" என பாராட்டியிருக்கிறார். அவரது இந்த ட்வீட் சோஷியல் மீடியாக்களில் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்ப ஆரம்பித்திருக்கின்றன.

என்ன கேள்விகள்?: அதாவது சிவகார்த்திகேயனின் பராசக்தியை கமல்ஹாசன், ரஜினிகாந்த் என சீனியர்களே பாராட்டிவருகிறார்கள். இந்த நேரத்தில் வந்து எகோ படத்தை தனுஷ் பாராட்ட வேண்டிய அவசியம் என்ன? சிவகார்த்திகேயனுடன் மனஸ்தாபத்தில் இருப்பதால்தான் அவர் பராசக்தி படத்தை பாராட்டவில்லை. அவர்களுக்குள் சண்டை வந்திருக்கிறது என பரவிய பேச்சுக்கள் எல்லாம் உண்மைதான் போல என கமெண்ட்ஸ் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X