தனுஷின் ‘ராயன்’ படத்துக்கு போட்டி.. விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் ஜூன் மாதம் வெளியாகாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தனுஷ்க்கு போட்டியாக விஜய் சேதுபதி தனது படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக மகாராஜா திரைப்படம் உருவாகியுள்ளது. அந்தப்படத்தின் மிகப்பெரிய அப்டேட் இன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக விஜய் சேதுபதி படம் வெளியாகப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Dhanush Raayan and Vijay Sethupathi s Maharaja will meet clash this June

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய சம்பவத்தை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் ராயன்: இந்த ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தனுஷை விவாகரத்து செய்த பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் படம் இயக்க ஆரம்பித்தார். ஆனால், 3 மற்றும் வை ராஜா வை படங்கள் அளவுக்கு கூட லால் சலாம் ரசிகர்களை கவரவில்லை. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படம் வரும் ஜூன் 13 திரைக்கு வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில்: அடங்காத அசுரன் ஃபர்ஸ்ட் சிங்கை தொடர்ந்து சமீபத்தில் பாக்கெட் எனும் இரண்டாவது சிங்கிலும் வெளியானது. இரண்டு பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், நேற்று படத்தின் பிஜிஎம் ஸ்கோரையும் இசைப்புயல் முடித்து விட்டதாக தனுஷ் பதிவிட்டு இருந்தார். திட்டமிட்டபடி ஜூன் 13-ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் அதில் எந்த ஒரு பின்வாங்கும் நடவடிக்கையும் இருக்காது என தெரிகிறது.

விஜய் சேதுபதி vs தனுஷ்: தனுஷ் இயக்கத்தில் தனுஷ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராவான கேங்ஸ்டர் படமாக ராயன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்தப் படத்துக்கு போட்டியாக விஜய் சேதுபதி நடித்துள்ள 50வது படமான மகாராஜா அதே தேதியில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொங்கலுக்கும் போட்டி: இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படங்களுக்கு போட்டியாக விஜய் சேதுபதி நடித்த இந்தி மற்றும் தமிழில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் வெளியானது. வித்தியாசமான படமாக உருவாகியிருந்தாலும் அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டாத நிலையில் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், தனது 50-வது படத்தின் மூலம் விஜய் சேதுபதி கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெறுவாரா விஜய்சேதுபதி?: குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக கடந்த ஆண்டு நடித்த ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்கள் ஓடுவதில்லை என்கிற கூற்றை மகாராஜா படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை 2 படத்திலும் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி லீடு ரோலில் நடித்துள்ளார். அதுவும் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X