காத்து மேல.. காத்து கீழ.. ராயன் கதை முடிந்ததா?.. வார நாட்களில் காத்து வாங்கும் தியேட்டர்கள்!
சென்னை: தனுஷின் ராயன் படம் கடந்த ஜூலை 26ம் தேதி வெளியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை நல்ல வசூல் வேட்டையை நடத்தியது. முதல் நாளே படத்திற்கு எதிரான விமர்சனங்கள் குவிந்த நிலையிலும், படம் திரையரங்குகளில் சிறப்பாகவே ஓடியது.
முன்னதாக இந்தியன் 2 திரைப்படத்திற்கும் சோஷியல் மீடியா முதல் பொதுமக்கள் வரை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான அந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்தது. அதிகபட்சமாக இந்தியன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், ராயன் திரைப்படத்திற்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், திங்கட்கிழமையான நேற்றும் செவ்வாய்க்கிழமையான இன்றும் திரையரங்குகள் டல் அடிக்க ஆரம்பித்து விட்டதாக கூறுகின்றனர்.
கொல்லும் ராயன்: அம்மா, அப்பா விட்டுப் போன பின்னர், உசுரே நீதானே என ராயன் தனது தம்பிகளான சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் தங்கையான துஷாரா விஜயனை வளர்த்து வருகிறார். தனுஷ் போல அவரது தம்பிகள் நல்லவர்களாக வளரவில்லை. தங்கை திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக வில்லன் எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து அண்ணன் தனுஷை குத்தி விடுகின்றனர். அங்கிருந்து தப்பித்துச் செல்லும் ராயன் குணமாகி வருகிறார். அவரது தம்பிகள் இருவரும் கொல்லப்படுகின்றனர். வில்லன் எஸ்.ஜே. சூர்யாவையும் ராயன் முடித்துக் கட்டுகிறார். ராயன் 2ம் பாகம் வந்தால் போலீஸ் அதிகாரியான பிரகாஷ் ராஜையும் ராயன் போட்டுத் தள்ளிவிடுவார் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ராயன் வசூல்: உலகளவில் ராயன் திரைப்படம் 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகவும் இந்தியா முழுவதும் 47 கோடி ரூபாய் வசூலை அடைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். திங்கட்கிழமை வசூல் முழுவதுமாக முடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையான இன்று தியேட்டர்கள் காத்து மேல, காத்து கீழ, காத்து சைட்ல என வாங்குவதாக கலாய்த்து வருகின்றனர்.

பச்சை நிறமே: புக் மை ஷோ ஸ்க்ரீன் ஷாட்களை போட்டு தனுஷின் ஹேட்டர்கள் ராயன் எல்லாம் ஒரு படம் அந்த படம் 100 கோடி வசூல் என எடிட் செய்து வெளியிடப் போறாங்க. ஆனால், உண்மை நிலை இதுதான் அனைத்து தியேட்டர்களும் பச்சை நிறம் தான் காட்டுகிறது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











