Kuberaa Trailer: உலகம் அவங்களது மட்டுமல்ல.. என்னோடதும்தான்.. குபேரா டிரைலரிலேயே மிரட்டிவிட்ட தனுஷ்!
ஹைதராபாத்: நாகர்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குபேரா. இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் டாப் இயக்குநரான சேகர் கம்முலா இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் இன்று அதாவது ஜூன் 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா கதாநாயகனாக நடித்துள்ள படம் குபேரா. இந்த படத்தின் மூலம் தனுஷ், நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முதன் முதலாக இணைந்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் தற்போது படக்குழு வெளியிட்டுள்ள டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
டிரைலரைப் பார்த்தால் படத்தின் கதை என்பது, " பிச்சைக்காரராக உள்ள தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் வில்லன்களுடன் கூட்டாளியாக உள்ள நாகர்ஜுனா உதவி செய்வதை போல் நடித்து ஏமாற்றுகிறார். இதைத் தெரிந்து கொண்ட தனுஷ் அவர்களிடமிருந்து தப்பித்து, அவர்களின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார். இதற்கு தடைகளாக வரும் விஷயங்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார். வில்லன்களுடன் கூட்டாளியாக இருக்கும் நாகர்ஜுனா ஒரு கட்டத்தில் அவர்களுக்கு எதிராக மாறுகிறார்" என்பதுதான் கதையாக இருக்கும் என ரசிகர்கள் டிரைலரை வைத்து டீகோட் செய்து வருகிறார்கள்.

குபேரா டிரைலர்: தனுஷ் நடிப்பில் வெளியாகும் 51 வது படம் இது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையே உள்ளது. இந்த படத்தை கடந்த 13ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் அகமதாபாத்தில் 12ஆம் தேதி ஏற்பட்ட விமான விபத்தினால் சுமார் 274 பேர் இறந்தனர். இதனால் படக்குழு டிரைலரை இன்று அதாவது ஜூன் 15ஆம் தேதி ரிலீஸ் செய்துள்ளது.
எஸ்.எஸ். ராஜமௌலி: ஹைதராபாத்தில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா குறித்து மிகவும் சிலாகித்து பேசினார். குறிப்பாக, அவர் பேசும்போது, " சேகர் உங்களது படங்கள் நீங்கள் நம்பும் அரசியலை பிரதிபலிப்பதாக உள்ளது. ஆனால் எனது படங்கள் அப்படி இல்லை, நான் நம்பும் அரசியல் வேறு எனது படங்கள் வேறு ஒன்றாக உள்ளது. நீங்கள் இப்படி படம் எடுப்பது உங்கள் வாழ்க்கை கொள்கைகளை பிரதிபலிக்கிறது, நீங்கள் இதே கொள்கையுடன் எப்போதும் இருக்க வேண்டும்" என்றும் பேசினார்.

தமிழ் டப்பிங்: படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் டிரைலரைப் பார்க்கும்போது படம் நேரடியாக தெலுங்கில் உருவாக்கப்பட்டு, அதனை தமிழில் டப் செய்துள்ளார்கள் என்பது போல் தெரிகிறது. தியேட்டரிலும் இதே போல் இருந்தால் ரசிகர்கள் ரியாக்ஷன் குறிப்பாக தமிழ் ரசிகர்களின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. படத்தின் டிரைலர் சுமார் 2 நிமிடங்களுக்கு கட் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











