மியூசிக்கோட நிறுத்திக்க குமாரு… ரசிகர்களை வச்சு செய்த ஆயிரம் ஜென்மங்கள் டிரைலர்!
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஆயிரம் ஜென்மங்கள் டிரைலரை தற்போது நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எழில் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஈஷா ரெப்பா நடிப்பில் உருவாகியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் டிரைலரை பார்த்த ரசிகர்கள் டிரைலர் ரொம்ப சுமாராக இருக்கிறது என்றும், சூப்பராக இருக்கிறது என்றும் மாற்றி மாற்றி கலவையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
தமிழில் ஒரு கோஸ்ட் பஸ்டர் படமாக உருவாகியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் டிரைலர் உண்மையிலேயே எப்படி இருக்கிறது என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
டிரைலரை ரிலீஸ் செய்த அசுரன்
தனுஷின் அசுரன் படத்திற்கு வேற லெவலில் இசையமைத்திருந்தார் ஜி.வி. பிரகாஷ், அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நன்றி
எழில் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டுள்ள நிலையில், அவருக்கு ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் எழில்
தளபதி விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கிய எழில், மனம் கொத்தி பறவை படம் மூலம் காமெடியில் கம்பேக் ஆனார். அந்த படத்தைத் தொடர்ந்து தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சரவணன் இருக்க பயமேன் என வரிசையாக காமெடி படங்களை இயக்கி வந்தார். தற்போது ஜி.வி. பிரகாஷை வைத்து பேய் படத்தை இயக்கியுள்ளார்.
டிரைலர் எப்படி இருக்கு?
தமிழில் முதன்முறையாக ஒரு கோஸ்ட் பஸ்டர் படமாக ஆயிரம் ஜென்மங்கள் உருவாகி வருகிறது என்ற அறிவிப்புகள் படத்தின் டிரைலர் மீது எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தின. ஆனால், படத்தின் டிரைலர் இது பேய் படமா இல்லை காமெடி படமா என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு சுமாரான மேக்கிங்கில் படம் உருவாகியிருப்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. மேக்கப் மற்றும் சிஜி காட்சிகள் எல்லாம் பழைய விட்டலாச்சாரிய படங்களே மேல் என்று சொல்லும் அளவிற்குத்தான் உள்ளது.

மியூசிக்கோட நிறுத்திக்க குமாரு
டிரைலரை பார்த்து அப்செட்டான ரசிகர்கள், சிறந்த இசையமைப்பாளரான உங்களுக்கு இது சுத்தமாக செட்டாகவில்லை என்றும், மியூசிக்கோட நிறுத்திக்க குமாரு என்றும் கலாய்த்து வருகின்றனர். டிரைலரை பார்த்து ரசிகர்கள் வச்சு செய்ததை விட டிரைலர் தான் ரசிகர்களை வச்சு செய்துள்ளது என்ற கமெண்டுகளும் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











